நாளைய தின வடக்கு கிழக்கு பொது முடக்கத்திற்கான காரணம் என்ன??விரிவான தகவல்…
நாளைய தினம் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பொது முடக்கத்திற்கு என தமிழ் அரசியல் கட்சிகளினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் நாளைய தினம் 20-ஆம் தேதி அன்று பூரண கதவடைப்பு பொது முடக்கத்திற்கு பலரும் ஆதரவளித்து வருகின்றனர்.
அதே சமயம் குறித்த பொது முடக்கத்திற்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர்களும் உட்பட முஸ்லிம் மக்களும் இதற்கு முழுமையான ஆதரவை தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் குறித்த பொது முடக்கமானது முல்லைத்தீவு நீதிபதியான சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் ,
மற்றும் கொலை மிரட்டல் நடவடிக்கையினை கண்டிக்கு முகமாகவே வடக்கு கிழக்குகளில் நடத்தப்படுகின்றது என தற்போது தெரியவந்துள்ளது.
மேலும் நீதிபதி சரவணன் ராஜா அவர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலானது உண்மையில் நீதித்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் நடவடிக்கை மட்டுமின்றி இது மிகப் பெரிய அளவிலான சுதந்திர தினையும் கேள்வி குறிக்குள்ளாக்குகின்றது.
மேலும் குறித்த விடயம் தொடர்பாக தமிழரசு கட்சிகள் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் இது போன்ற அற்ப சுயநல அரசியல் லாபத்திற்காகவும் தங்களது வசதிக்காககவும் ,
வடக்கு மற்றும் கிழக்குகளில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களை பலர் இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் கடந்த காலங்களில் தொடர்ச்சியாகவே இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவும் அதனை வன்மையாக கண்டித்தும்,
நாளைய தினம் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒருமித்த குரலில் கடையடைப்பு நடவடிக்கைகளில் ஒன்று படுவோம் என தமிழ் கட்சிகள் தற்போது அழைப்பினை விடுத்துள்ளது.
மற்றும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களாக இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து முன்னோக்கி பயணிப்போம் என்பதனை நாளைய பொது முடக்கத்தில் பங்களிப்பனை வழங்குவதன் ஊடாக உறுதிப்படுத்துவோம் என்றும்,
மற்றும் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை ஒருபோதும் பிரிக்க முடியாது என்பதனை பகிரங்கமாக இலங்கை அரசுக்கும் மற்றம் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்துவோம் என்பதில் ஐயமில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.