Srilanka News

இலங்கையில் இன்று நடைபெற்ற வாள்வெட்டு தாக்குதல்!!

இலங்கையில் இன்று கொழும்பு பிரதேசத்திற்கு உட்ப்பட்ட களுபோவில இடத்தில் சாரங்கர எனும் வீதியில் உள்ள வணிக நிலையம் ஒன்றுக்கு முன்பாகவே இவ் வாள்வெட்டு தாக்குதல் நடைபெற்று உள்ளது.

குறித்த தாக்குதலுக்கு வாள்கள் மற்றும் கூறிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத் தாக்குதலுக்கு இலக்காகி சுமார் மூவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இலங்கையின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவமானது இன்று அதிகாலையில் இடம் பெற்றதாகவும் தெரிய வந்துள்ளது.

வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான நபரானவர் குறிப்பிடுகையில் தனது சகோதரனிடமிருந்து இப்படி அடிக்கடி கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் .

மேலும் இது தொடர்பாக பலமுறை போலீசாரிடம் முறைப்பாடு செய்ததாகவும் அவர் கூறுகின்றார் .

மற்றும் இவ் முறைப்பாட்டிற்குரிய முழுமையான நீதி கிடைக்காததினால் தனக்கு தொடர்ந்தும் தனது சகோதரனானவர் இவ்வாறான மிரட்டலினை விடுத்து வருகிறார் என வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான வர்த்தகர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் இத் தாக்குதலானது தன்னை கொல்லும் நோக்கிலே இடம் பெற்றதாகவும், மேலும் இந்த கும்பலானது தனது சகோதரனினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

இது தொடர்பாக குறித்து இலங்கையில் இன்று சம்பவத்திற்கு இலக்கான வர்த்தகரானவர் போலீசில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் , இவருடைய வாக்குமூலத்தினை அடுத்து ஆரம்ப கட்ட விசாரணைகள் ஆரம்பிக்க உள்ளதாகவும் போலீசார் தரப்பினார் தற்போது தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button