இணைய வழி மூலம் பண மோசடி…. இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!!! வெளியான உண்மைகள்….
தற்போது இணைய வழி மூலம் மக்களை ஏமாற்றி அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பல லட்சம் ரூபாய்களை பெற்றுக் கொள்ளும் ஏமாற்றும் கும்பல்கள் பல இலங்கையில் செயல்பட்டு வருகின்றது.
இந் நிலையில் இதனை நிறுத்தும் முகமாக குற்றப் புலனாய்வு திணைக்களமானது இது தொடர்பில் விசாரணைகளை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை பொது மக்களில் ஆன்லைனில் பணப்பரிமாற்றத்தினை மேற்கொள்ளும் நபர்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க கோரி போலீசாரினால் பொது மக்களுக்கு விசேட எச்சரிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இணைய வழி மூலம் பணத்தினை இழந்த பலர் குறித்த கும்பல்களிடம் சிக்கி ஏமாற்றப்பட்டு பின்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் மோசடி விசாரணை பிரிவு ஆகிய நிலையங்களிலும் மற்றும் போலீஸ் நிலையங்களிலும் முறைப்பாடு செய்துள்ளதும் பதிவாகி இருக்கின்றதாக போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
இதனால் இணைய வழி மூலம் பணப்பரிமாற்றத்தினை மேற்கொள்ளும் நபர்கள் இது குறித்து மிகத்தெளிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மற்றும் இது குறித்து சற்று விழிப்பாக நடந்து கொள்ளுமாறும் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
மற்றும் இவ்வாறு செய்கின்ற மோசடி ஏற்கனவே பிடிபட்டுள்ளதாகவும் இருப்பினும் வெவ்வேறு வழிகளில் தங்களது மோசடி நடவடிக்கைகளை செய்து வருகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.
இதில் இலங்கை அப்பாவி மக்கள் பலர் ஏமாற்றப்படும் வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட சில விளம்பரங்கள் மூலம் நபர்களின் கையடக்க தொலைபேசி எண்களை பெற்றுக்கொண்டு,
அதன் பின்னர் அந்த குழுக்கள் இணையவழி பரிவர்த்தனை மூலம் பணப்பரிமாற்றத்தினை செய்வதற்கு தூண்டுகின்றது என ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வருகின்றது.
அதன் பின்னர் அவர்களின் வங்கி கணக்கு எண்களை பெறும் நடவடிக்கைகளையும் செய்திருக்கின்றன.
இதன் பின்னால் இணைய மூலம் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் நுழைந்து வேறு கணக்குகளில் பணத்தை வரவு செய்துவிட்டு,
அப்பாவி மக்களை ஏமாற்றும் நடவடிக்கையானது இந்த குழுவினரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.
எனவே இவ்வாறான மோசடி நபர்களிடம் பாதுகாப்பாக இருந்து கொள்ளுமாறு போலீசார் தற்போது இலங்கை மக்களுக்கு மிகப்பெரிய எச்சரிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளனர்.