பழுதடைந்த கோழி இறைச்சி… தனியார் ஹோட்டலுக்கு சுகாதார பரிசோதகர் எடுத்த அதிரடி நடவடிக்கை!!
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் இராஜகிரிய எனும் இடத்தில் பிரபல தனியார் உணவகம் ஒன்றில் பழுதடைந்த கோழி இறைச்சி விற்பனை செய்ததன் காரணமாக சுகாதார பரிசோதகரினால் தக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
அவ் உணவகம் ஒன்றில் நுகர்வோர் ஒருவரினால் செய்யப்பட்டு முறைப்பாடுகளின் அடிப்படையில் சுகாதார பரிசோதகரினால் அங்கு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன .
அப்போது பழுதடைந்த கோழி இறைச்சிகள் மீட்கப்பட்டுள்ளன. இந் நிலையில் வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து கோழி இறைச்சி மீது துர்நாற்றம் வீசுவதாக பெறப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து,
குறித்த பகுதிக்கு பொறுப்பான சுகாதார பரிசோதகரினால் குறித்த நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மற்றும் குறித்து இறைச்சியானது உணவகத்தில் இருந்து போலீசாரினால் மீட்க்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் மேலதிக விசாரணைக்காக குறித்த கோழி இறைச்சியின் மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு சோதனை செய்வதற்கு ஆயத்தமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் ஆராய்ச்சிக்குரிய முடிவுகள் 10 நாட்களில் வெளியாகும் எனவும் குறித்த சுகாதார அதிகாரி தெரிவித்து இருக்கின்றார்.
இதனை அடுத்து குறித்த உணவகத்தின் இது குறித்தான செயற்பாடு குறித்து உணவகத்திற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறித்த சுகாதார உத்தியோகத்தால் தெரிவித்து இருக்கின்ற அமையும் குறிப்பிடத்தக்கது.