மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு…
மனித உரிமைகள் ஆணைக்குழுவானது நாட்டில் உள்ள மனித உரிமை பாதுகாவலர்களையும் மற்றும் ஏனையவர்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கையினை எடுத்து வருவதாகவும் மற்றும் அதற்குரிய வழிகாட்டல்களையும் மற்றும் ப பரிந்துரைகளின் பட்டியலையும் தற்போது வெளியிட திட்டமிட்டுள்ளது.
மற்றும் குறித்த திட்டமிடப்பட்ட பரிந்துரைகளை உறுதி செய்வதற்குரிய ஆலோசனைகளும் நடைபெற்று வருவதாக மனிதஉரிமைகள் ஆணைக்குழு அறிவிப்பினையும் விடுத்துள்ளது.
கடந்த 10-ம் தேதி நடை பெற்ற கூட்டத்திலே இலங்கையில் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை மனிதஉரிமைகள் ஆணைய குழு உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர்.
சிவில் சமூகப் பிரதிநிதிகள் தங்களது அனுபவங்களையும் மற்றும் பரிந்துரைகளையும் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவுடன் பகிர்ந்து கொள்வதற்கும் மற்றும் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் தற்போதைய வேலை திட்டம் தொடர்பாகவும் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருக்கின்றார்.
மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பில் இலங்கையின் மனித உரிமைகளை பாதுகாத்தல், ஊக்குவித்தல் மற்றும் நிறைவேற்றுதல் ஆகிய துணைப் பொருள்களில் இயங்குவதுடன் ,
மற்றும் அதனை வழிப்படுத்துவது தொடர்பாக தம்முடன் நெருக்கமாக பணியாற்றுமாறு சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு ஆணைக் குழுவானது அழைப்பு விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது