Srilanka News

கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக வெடிக்கவுள்ள போராட்டம்…. தயார் நிலையில் உள்ள போலீசார்…..

இலங்கை நாட்டின் தலை நகர் பகுதியான கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக தங்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கொழும்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மற்றும் குறித்த ஆர்ப்பாட்டமானது டெலிகொம் வளங்களை விற்பனை செய்வது குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் தற்போது நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் அமையப் பெற்றுள்ள பிரதான டெலிகொம் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமானது நடத்தப்பட்டு வருகின்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தின் போது ஊழியர்கள் சார்பாக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் மற்றும் அவர்களுக்குரிய சலுகைகளை முறையாக கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் பாதாதைகள் ஏந்தி மற்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டும் குறித்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகின்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தினை முறியடிப்பதற்கு குறித்த பிரதேசத்தில் கழக தடுப்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

மற்றும் போராட்டத்தை கலைப்பதற்க்கென நீர் தாரை வண்டிகளும் தயார் நிலையில் உள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

மற்றும் கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு என நாடு முழுவதும் பணியாற்றுகின்ற டெலிகொம் ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

கொழும்பில் அரசாங்கத்திற்கு

இவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிக் கோரி பல தரப்பினரும் தற்போது சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button