சர்வதேச ரீதியில் சாதனை படைத்த வடமாகாண மாணவர்கள்… குவிந்த பாராட்டுக்கள்….
தற்போது மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மன கணித போட்டியில் வட மாகாணமான யாழ் மாவட்டத்தினை சேர்ந்த விக்னேஷ்வரன் ருஷாந்தன் என்பவர் சர்வதேச ரீதியில் சாதனை படைத்து வெற்றியாளராக தெரிவாகியுள்ளார்.
குறித்த மாணவன் மட்டும் இன்றி சர்வதேச ரீதியில் இடம் பெற்ற இவ் மனக்கணித போட்டியில் இலங்கையை சேர்ந்த சுமார் 60 மாணவர்கள் பங்கு பற்றி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதிலே வடமகாணத்தின் யாழ் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 24 மாணவர்களும் பங்குபற்றி இருக்கின்றனர் .
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மலேசியாவில் இப் போட்டியானது நடைபெற்று இருக்கின்றது.
மற்றும் குறித்த போட்டியில் சுமார் 84 நாடுகளில் இருந்து 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப் போட்டியில் கலந்து கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
மற்றும் இப் போட்டி தொடரானது A,B ,C ,D ,E ,F எனும் பிரிவுகளின் கீழ் நடைபெற்றதாகவும் தெரியவந்துள்ளது.
யாழ் மாவட்டத்திலிருந்து கலந்து கொண்டிருந்த 24 மாணவர்களில் தம் தம் பிரிவில் போட்டியிட்டு பலர் வெற்றிகளை ஈட்டியதுடன் விக்னேஷ்வரன் ருஷாந்தன் என்னும் மாணவன் C பிரிவில் போட்டியிட்டு வெற்றியாளராக தெளிவாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத்திலிருந்து பங்கு பற்றிய மாணவர்களில் சுதர்சன் அருணன் வயது ஆறு, வைசாலி ரஜீவன் வயது 8 , அஷ்வினி அனோஜன் வயது 8 ஆகிய மூவரும் 2ம் இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து பங்கு பற்றிய 20 மாணவர்கள் மூன்றாம் இடத்தினை தக்கவைத்துக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நாடு கடந்து மலேசியா வரை சென்று சர்வதேச ரீதியில் சாதனை படைத்து வெற்றி ஈட்டிய மாணவர்களை பலர் பாராட்டி வருகின்றனர்.