Srilanka News

திருகோணமலையில் மாவீரர்களின் நினைவிற்கு தடை விதித்த நீதிமன்றம்!! களத்தில் இறங்கிய சுமந்திரன்…

தமிழர் தாயகங்களில் இன்றைய தினம் மாவீரர்களின் நினைவேந்தல் வைபவமானது நடைபெற ஆயத்தமாக இருக்கின்ற போதிலும் திருகோணமலையில் மாவீரர்களின் குறித்த வைபவத்தில் நடத்துவது குறித்து நீதிமன்றமானது தடையினை இட்டுள்ளது.

குறித்த தடையானது திருகோணமலையில் சம்பூர் ஆலங்குளம் பகுதியில் விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து குறித்த தடையினை நீக்குமாறு மூதூர் நீதிமன்றத்திலே நகர்தல் பத்திரமானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்து நகர்தல் நகர் பத்திரமானது சட்டத்தரணி டி இராமநாதன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மற்றும் ஜனாதிபதி அவர்களின் சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் அவர்கள் இது தொடர்பில் தன்னுடைய வாதத்தின் முன்வைக்க உள்ளதாக செய்தியாளர்களுக்கு தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் மாவீரர்களின்

இதனை அடுத்து உடனடியாக சுமந்திரன் மற்றும் அவர்களுடன் இணைந்த குழுவினர் மூதூர் நீதிமன்றத்திற்கு நுழைந்து இதற்குரிய மேலதிக நடவடிக்கைகளிலே மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலையில் மாவீரர்களின் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சுமார் 17 பேருக்கு நினைவு கூறுவதற்குரிய தடை உத்தரவினை மூதூர் நீதிமன்றம் ஆனது பிறப்பித்து இருக்கின்றது.

சம்பூர் போலீஸ் நிலைய அதிகாரிகள் மூதூர் நீதிமன்றத்தின் நீதவான் அவர்களுக்கு போலீசாரினால் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த சுமார் 17 நபர்களுக்கு எதிராக தடை உத்தரவை பிறப்பிக்க கோரி இருக்கின்றார்.

இதனை தொடர்ந்தே குறித்த 17 நபர்களுக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது . இதற்கு நியாயம் கோரி குறித்த 17 பேரின் தடையினை நீக்குமாறு சுமந்திரன் மற்றும் அவர்களுடன் பலர் போராடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button