Srilanka News

இந்திய இலங்கை கப்பலில் கடத்தப்பட்ட தங்கம்…

இந்திய இலங்கை கப்பல் சேவையானது கடந்த 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றது.

இந் நிலையில் குறித்த கப்பல் ஆனது இலங்கையின் காங்கேசன் துறையில் இருந்து இந்தியாவின் நாகப்பட்டினம் வரையிலான பயணத்தை மேற்கொள்கிறது.

அந்த வகையில் இன்றைய தினம் இந்திய இலங்கை கப்பல் ஆனது இலங்கையிலிருந்து முற்பகல் 11 மணியளவில் புறப்பட ஆயத்தமாக இருந்த நிலையில் குறித்த கப்பலில் தங்கம் கடத்துவதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் கப்பல் ஆனது முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது .

இதன் காரணமாக சுமார் 2 மணி நேரங்களுக்கு மேலாக குறித்த கப்பல் இல் பயணம் மேட்கொள்ள இருந்த பயணிகள் அசௌகரியத்தையும் எதிர்நோக்கி உள்ளனர்.

இதனை அடுத்து முழுமையாக சோதனை செய்த பின்னர் கப்பலில் இருந்து எவ்வித தங்கங்களும் மீட்க்கப்படவில்லை என குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இந் நிலையில் சுமார் இரண்டு மணி நேரங்களுக்கு பின்னரே தாமதமாக கப்பல் ஆனது இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய

இந்திய மற்றும் இலங்கை இடையிலான கப்பல் சேவையானது பல்வேறுபட்டு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மற்றும் பல்வேறுபட்ட சிரமங்களுக்கு மத்தியிலும் தற்போது வரை வெற்றிகரமாக பயணங்களை மேற்கொண்டு வருகின்றது.

இந் நிலையில் இக் கப்பல் சேவையானது நிலைத்து இயங்குவதற்கு பயணிப்பவர்கள் ஆதரவினை வழங்க வேண்டும் என தற்போது பலதரப்பும் தெரிவித்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button