இலங்கையில் அரச வங்கியில் திருடப்பட்ட கோடிக்கணக்கான தங்கம்…
இலங்கையில் அரச வங்கி ஒன்றில் திருடுச் சம்பவம் தற்போது நடந்து உள்ளதாக இலங்கையின் பல்வேறு ஊடகங்கள் தகவல்களை வழங்கி உள்ளது.
இலங்கையில் வெண்னபுவ என்னும் பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் கோடிக்கணக்கில் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் இலங்கை போலீசார் தற்போது ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்து விசாரித்து வருகின்றனர்.
இலங்கையில் அரச வங்கியில் கையிருப்பாக வைக்கப்பட்டுள்ள சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் திருடப்பட்டு உள்ளது.
இச் சம்பவம் கடந்த மாதம் 28ந்த் திகதி இலங்கையின் வென்னப்புவ பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது .
மேலும் இரவு வேளையில் குறித்த வங்கிக்குள் பிரவேசித்த மர்ம நபர்களினாலே அங்கிருந்த பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து தங்கத்தை எடுத்துச் சென்றதாக போலீசார் தற்போது தெரிவித்திருக்கின்றனர்.