Srilanka News

வடக்கு கிழக்கிலிருந்து வெளிநாடுகளுக்கு வெளியேறும் தமிழர்கள்!!!! இலங்கையில் கேள்விக்குறியாகும் தமிழர்களின் சனத்தொகை……

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக வடக்கு கிழக்கிலிருந்து பெரும்பாலான தமிழ் மக்கள் வெளிநாடு நோக்கி தங்களது பயணங்களை ஆரம்பித்து இருக்கின்றனர்.

இவர்கள் வசதியான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை நோக்கி வெளிநாடு வாழ்க்கையை தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இலங்கையில் அதிகரித்து வரும் விலைவாசியும் மற்றும் வாழ்க்கை செலவீனங்களும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது .

இந் நிலையில் குடும்பம் குடும்பமாக இது வரையில் அதிகளவான தமிழ் பேசும் மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையின் காரணமாக எதிர்வரும் காலங்களில் வடக்கு கிழக்கில் தமிழர்களின் சனத் தொகையில் பாரியளவு வீழ்ச்சி காணப்படும் என தற்போது தமிழரசு கட்சி திருகோணமலை மாவட்ட தலைவரான சண்முகம் குகதாசன் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார்.

இந் நிலையில் திருகோணமலை பகுதியில் முதலாம் இடத்தில் காணப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையானது தற்போது குறைந்து இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளதாகவும் இனி வரும் காலங்களில் இன்னும் பின்னோக்கி செல்ல வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.

மற்றும் குறைந்தது திருகோணமலையிலிருந்து ஒவ்வொரு நாளும் பத்து குடும்பங்கள் வரை வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர் என்பதையும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.

இதன் காரணமாக இலங்கை நாட்டில் வடக்கு கிழக்கிலிருந்து தமிழர்களின் சனத்தொகையானது எதிர்காலங்களில் பாரியளவு வீழ்ச்சி காணக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.

Related Articles

Back to top button