எதிர்வரும் காலங்களில் இலங்கையில் அதிபயங்கர நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும்!!
எதிர்வரும் காலங்களில் இலங்கையில் அதி பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும் என கூறி உள்ளார் பேராதனிய பல்கலைக்கழ பேராசிரியர் .
நேற்றைய தினம் மட்டக்களப்பில் (செப்டம்பர் மாதம் 11-ம் தேதி 2023 ஆம் ஆண்டு) மட்டக்களப்பில் அதிகாலை சுமார் 1:30 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆனது சுமார் 4.6 ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது.
இதனால் எதிர்வரும் காலங்களில் இலங்கையின் பல நில நடுக்கங்கள் ஏற்படலாம் என எதிர்வு கூறல்களை கூறியிருக்கின்றார் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியரான பேராதனை பல்கலைக்கழகத்தின் அதுல சேனாரத் தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று மட்டக்களப்பில் இருந்து சுமார் 310 கிலோமீட்டர் வரையிலான தொலைவில் வடகிழக்கு பகுதியில் உள்ள ஆழ் கடலிலே இவ் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இது குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றனர்.
இவ்வாறு ஏற்படுகின்ற நிலநடுக்கம் இலங்கையை பெரிதும் பாதிக்காது எனவும் இது குறித்தான எவ்வித சுனாமி பேரலைகளும் ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் எதிர்வரும் காலங்களில் இலங்கையின் இந்திய – ஆஸ்திரேலியா காடல் பகுதியில் பெரிய அளவிலான நிலநடுக்கத்தினை எதிர்பார்க்கின்றதாக நிலநடுக்கம் தொடர்பான எதிர்வு கூறல்களின் போது அவர் தெரிவித்து இருந்தார்.
மேலும் நேற்றைய தினம் சுமார் எட்டு நில நடுக்கங்கள் பதிவாகியுள்ளதாகவும் இவை அனைத்தும் நான்கை விட அதிகளவான ரிக்டர் அளவுகளில் பதிவாகி உள்ளதும் தெரிய வந்துள்ளது.
இந்தோ – ஆஸ்திரேலியா டெக்டோனிக் தகடு மற்றும் இந்தோனேசியா – ஜப்பான் இடையிலான டெக்டோனிக் தகடுகளில் ஏற்பட்டு உள்ள பிரிவினாலேயே நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது .
இதனாலே இத் தகடுகளினால் எதிர்வரும் காலங்களில் பாரிய நில நடுக்கம் ஏற்படக்கூடும் என அவர் முன்னறிவித்துள்ளார்.
இப்போது பதிவாகியுள்ள நாளைவிட அதிகளவான ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆனது அடுத்தடுத்த தகடுகளின் விரிவின் போது இதைவிட ரிக்டர் அளவுகளில் பெரிதாகவே நிலநடுக்கம் ஏற்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இருப்பினும் இவ்வாறு ஆழ் கடல்களில் ஏற்படுகின்ற நிலநடுக்கம் காரணமாக இலங்கை நாட்டினில் சுனாமி ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றது.
இருப்பினும் கிழக்கு கடற்கரைகளில் இவ்வாறான நிலநடுக்கம் பதிவாகும் ஆனால் அப்போதே இலங்கையில் சுனாமி அபாயம் அதிகரிக்கக்கூடும் எனவும் பேராசிரியர் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் கடந்த வாரங்களில் அநேக நிலநடுக்கங்கள் பதிவாகி இருந்தன. இதில் வடக்கு ஆபிரிக்கா மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கமே சக்தி வாய்ந்த அதிக ரிக்டர் அளவில் பதிவாகி அநேக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா பகுதியில் பூமிக்கு கீழ் அமைந்துள்ள இரண்டு தட்டுக்களில் ஏற்படும் பிளவு காரணமாகவே இந்த நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் எதிர்காலத்தில் இருப்பினும் எதிர்காலத்தில் தெற்கு அறைக்கோலத்தில் ஏதேனும் நிலநடுக்கங்கள் பதிவாகாக் கூடும் இருப்பினும் அதன் விளைவாக இலங்கை பாதிக்கப்படாது எனவும் பேராசிரியர் தெரிவித்தார்.
நிலநடுக்க பதிவுகள்…
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 99 நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன. இன்றைய தினம் இந்தோனேசியாவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது .
மேலும் இந்த வாரம் 6.8 ரிக்டர் அளவுகளில் மொரோக்கோவிலே நிலநடுக்கம் ஏற்பட்டு அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆனது இம் மாதம் இந்தோனேசியாவில் பதிவாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.