காலநிலை மாற்றத்தினால் பரிதாபகரமாக உயிர் நீத்த நால்வர்!! மேலும் இடம்பெயரும் குடியிருப்பு வாசிகள்….
இலங்கை தற்போது நிலவி வருகின்ற காலநிலை மாற்றத்தினால் சீரற்ற காலநிலையினால் சுமார் இரண்டு தினங்களில் 198 குடும்பங்களைச் சேர்ந்த 662 பேர் தங்களது குடியிருப்புகளை விட்டு வேறொரு குடியிருப்புகளுக்கு இடம்பெயர்ந்து உள்ளதாக தற்போது அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மற்றும் நாட்டில் ஆங்காங்கே ஏற்படுகின்ற மண்சரிவினாலும் மற்றும் மழையின் காரணமாக ஏற்படுகின்ற மின்னல் தாக்கத்தினாலும் இலங்கை நாட்டில் சுமார் நால்வர் உயிரிழந்துள்ளதாக குறித்த அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு காலநிலை மாற்றத்தினால் உயிரிழந்தவர்களில் பதுளை பகுதியினைச் சேர்ந்த இரண்டு யுவதிகளும் மற்றும் பேராதனை பகுதியில் நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது .
இதனை அடுத்து மின்னல் தாக்கி களுத்துறை பகுதியில் சிறுவன் ஒருவனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து குடியிருப்பு வாசிகள் தங்கள் வாழ்கின்ற வீடுகளில் சுமார் 37 வீடுகள் பகுதியாக சேதம் அடைந்துள்ளதாகவும் மற்றும் ஒரு வீடு முழுமையாக சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் .
எனவே நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழ்கின்ற மக்கள் இது குறித்து சற்று எச்சரிக்கையாக இருப்பதோடு தங்கள் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆனது மக்களுக்கு தெரிவித்துள்ளது.