வடக்கு கிழக்கில் கனமழைக்கு வாய்ப்பு!!! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்த மாவட்டங்கள்…
தற்போது அந்தமான் கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சியானது இந்திய பெருங்கடலிலே இன்னுமொரு காற்று சுழற்சியை உருவாக்கி இருக்கின்றது இந் நிலையில் குறித்த காற்று சுழற்சியானது இலங்கையின் வடக்கு கிழக்கில் இன்னும் அதீத சேதங்களை உண்டுபடுத்தும் என வளிமண்டலவியல் திணைக்களமானது தற்போது அறிவித்து இருக்கின்றது.
அவ் நிலையிலே குறித்த இரண்டு காற்று சுழற்சிகளும் ஒன்றாக சேர்ந்து நகர்ந்து கொண்டிருப்பதினால் அதின் விளைவுகளை இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்கள் எதிர்நோக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களமானது எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இன்றைய தினம் அதிக மழை பெய்யக்கூடும் எனவும் மற்றும் முல்லைதீவில் நாளைய தினம் மழை பெய்வதற்குரிய சாத்திய கூறுகள் அதிகமாக இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரித்துள்ளது.
மற்றும் மேற் குறிப்பிட்ட மாவட்டங்களில் குறித்த கனமழையானது சில நாட்களுக்கு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் வடக்கு மாவட்டங்களான யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஓரளவான மழை பெய்வதற்குரிய சாத்திய கூறும் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களமானது தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.