இலங்கையில் ஏற்பட்ட பாரிய விபத்து ஐவர் பலி!!
இலங்கையில் ஏற்பட்ட பாரிய பேருந்து விபத்தானது அதிகாலை 5.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளது.
மேலும் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இவ் விபத்தில் இலங்கையின் அரச பேருந்து விபத்துக்கு உட்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் குறித்த விபத்தானது பெரிய மரம் ஒன்று விழுந்ததினால் ஏற்பட்டுள்ளது .
இவ் விபத்தில் 5 பேர் உயிரிழந்ததோடு சுமார் பலர் படுகாயம் அடைந்து வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த பேருந்தானது தென்னியாவிலிருந்து கொழும்பு வந்து மீண்டும் கொழும்பிலிருந்து அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் மத்துகம நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
மேலும் குறித்த பேருந்து விபத்தின் காரணமாக உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆண்கள் எனவும் தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து உயிரிழந்த ஐவரின் இறுதி சடங்கிற்காகவும் தலா 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு இன்று அதிகாலை நடை பெற்ற இவ் விபத்தானது இலங்கையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் குறித்த பேருந்தில் அநேக பாடசாலை பயணித்துள்ளார் எனவும் பயணித்து மாணவர்கள் பலரும் காயமடைந்துள்ளதாகவும் மேலும் அதில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட இவ் விபத்தின் போது சுமார் 15 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 26 நபர்கள் காயமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.