Srilanka News

கோட்டாபாய தொடர்பான மர்மங்களை வெளிப்படுத்திய சஜித்!!

தற்போது உயர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக வெவ்வேறான கருத்துக்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன மேலும் இது தொடர்பாக அப்போது இருந்த ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்க்ஷ குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சஜித் தற்போது செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது ; ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதல் இனை விசாரணை சுமார் 31 பேரை உடனடியாக கோட்டாபய இடமாற்றம் செய்துள்ளார் .

மேலும் கோட்டாபாய ஜனாதிபதி ஆவதற்கு முன்னரே ஷானி அபேசேகரவையும் இடமாற்றம் செய்துள்ளார்.

இவர் மிகவும் நேர்மையான அதிகாரி எனவும் அவர் குறிப்பிட்டார் .

இவ்வாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரணை செய்து வந்த 31 பேரை கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் பரிந்துரைப் பேரிலே அவர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என சஜித் இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வின் போது தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு பின்னால் உள்ள உண்மைகளை யாவரும் அறிய வேண்டும் எனவும். மேலும் இது பொய்யல்ல உண்மை சம்பவம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனை அடுத்து அவர் கூறுகையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை ஏன் காப்பாற்ற துடித்தீர்கள் எனவும் அவர் கோட்டாபாய மீது குற்றம் சுமத்தியுள்ளார் .

இவரது இன்றைய உரையானது உண்மையில் சனல் 4 குறிப்பிட்ட ஆவணப்படுத்தலில் குற்றம் சாட்டப்பட்டவர்களையே இவரும் குற்றம் சாட்டி உள்ளார் என தெள்ளத்தெளிவாக தெரிகின்றது .

Related Articles

Back to top button