ரணிலுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்.. உடனடியாக வெளியேறிய ரணில்!!
ஐ. நா சபையின் 78வது கூட்டத் தொடரானது தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடை பெற்று வருகின்றது இந் நிலையில் இலங்கையின் ஜனாதிபதி ரணில் அவர்கள் நேற்றைய தினம் இலங்கை குறித்து அறிக்கையினை சமர்ப்பிக்கும் நேரத்தில் நியூயார்க் நகரத்தில் ஐநா சபையின் முன்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது ரணிலுக்கு எதிராக முன்னெடுத்த போராட்டத்தின் காரணமாக உடனடியாக ஐ . நா சபையை விட்டு இலங்கை ஜனாதிபதியான ரணில் அவர்கள் ஐ.நா சபையில் இருந்து வெளியேறியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது .
மேலும் இப் போராட்டத்தில் அநேக தமிழ் மக்கள் ஒன்று திரண்டு தமிழீழ தேசியக்கொடியுடன் போராட்ட களத்தில் போராடியமையும் குறிப்பிடப்படுகின்றது.
போராட்டம் …
மேலும் இந்தப் போராட்டமானது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவரான விஸ்வநாதன் உருத்திரகுமாரன் என்பவரின் தலைமையிலே நடைபெற்றிருக்கின்றது.
இதன் போது நிரந்தர அரசியல் தீர்வு மற்றும் பொது வாக்கெடுப்பின் முக்கியத்துவத்தையும் ,
மேலும் இதன் போது அரசியல் தொடர்பான தீர்வினை பெற்று தருமாறும் , தமிழ் குடியிருப்புகளில் பௌத்தமயமாக்கல், சிங்களக்குடியேற்றம் ஆகியவற்றில் ஐநாவின் தலையீடு இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்.
மேலும் இப் போராட்டத்தின் போது தியாக திலீபன் நினைவேந்தல் ஊர்தியை அடித்து நொறுக்கிய சிங்கள பௌத்த அரசே, இனவெறி அரசே வெளியேறு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? மற்றும் ரணில் ஐ. நாவிற்கு வருவது ஐ. நாவுக்கு அவமானம்.
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்து!! போன்ற பதாகைகள் அடங்கிய கோஷங்களை கையில் ஏந்தியவாறு போராட்டம் ஆனது நடை பெற்றிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் உலகில் உள்ள இலங்கைத் தமிழர்கள் இது குறித்து தங்களது விமர்சனங்களையும் தற்போது தெரிவித்து வருகின்றனர்.
போரின் மூலம் இல்லாத ஒழிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க கோரி இவ்வாறு பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இவ்வாறு இன்றைய தினம் இலங்கை ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக இப் போராட்டம் ஆனது தற்போது பல மீடியாக்களை தன் வசப்படுத்தி இருக்கின்றது.
இலங்கையில் ஏற்பட்ட தமிழ் மக்களுக்கான அநீதி ஆனது தற்போது வரை பல தரப்பினால் போராட்டங் களாகவும் மற்றும் பல்வேறு விதங்களில் இது குறித்த கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் இது குறித்து தற்போது வரை நீதி கிடைக்காததினாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆக்கப் பட்டவர்களை சிங்கள அரசானது என்ன செய்தது என்றும் தெரியாமல் அவர்களை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் உறவுகள் தற்போது வரை இருந்து வருகின்ற செய்தியை அவ்வப் போது சமூக வலைத்தளங்கள் வாயிலாக அறியக் கூடியவாறு இருக்கின்றது.
இதனை அடுத்து அவ்வப்போது வெளிநாடுகளில் இலங்கை குறித்து ஏற்படுகின்ற போராட்டங்கள் பல்வேறு விதமாக பேசப்பட்டாலும் உண்மையில் அவர்கள் நீதிக்காகவே இவ்வாறு தங்களது எதிர்ப்பினையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக பின்புலத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் யார் என்பதை அறிந்தும் இது குறித்து தக்க தண்டனையோ அல்லது இது குறித்தான பேச்சுகளோ இன்று வரை பகிரங்கமாக பேசப் படாதனாலேயே இவ்வாறான போராட்டங்கள் நிலவுகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.