இலங்கையில் ஏற்பட உள்ள பாரிய எதிர்ப்பு போராட்டம்… வெளியான அறிவிப்பு!!
இலங்கையில் அரச ஊழியர்கள் தொழிற்சங்கம் தற்போது பாரிய போராட்டம் ஒன்று எதிர்வரும் வாரங்களில் இலங்கையில் ஏற்பட உள்ளதாக தற்போது தகவலினை வெளியிட்டு உள்ளது.
மேலும் இப் போராட்டமானது 20000 ரூபாய் சம்பள உயர்வினை வழங்க வேண்டும் என கோரியே நடத்தப்பட உள்ளதாகவும் குறித்த தொழிற்சங்க அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும் அடுத்த வாரத்தில் இலங்கையில் ஏற்பட உள்ள குறித்த போராட்டத்தில் அரசாங்கம் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான தனியார் நிறுவனங்களில் தொழில் புரிகின்ற தொழிற்சங்க ஊழியர்கள் இப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தொழிற்சங்கத்தின் ஒன்றிய இணை அழைப்பாளர் தற்போது தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்களை ஒதுக்குதல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் ஊடக ஒழுக்க விதிகள் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இப் போராட்டம் நடை பெற உள்ளதாக தெரிய வருகிறது.
இது தொடர்பாக பொறுப்பான அதிகாரிகளுக்கு தகவல்கள் வழங்கப்பட்ட போதிலும் அதற்குரிய எந்த ஒரு நடவடிக்கையும் உரிய அதிகாரிகள் எடுக்க எடுக்கவில்லை என்பதினால் குறித்த போராட்டமானது அடுத்த வாரம் இடம் பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .
இலங்கையில் ஏற்பட்டுள்ள நாளாந்த விலைவாசிகளுக்கு ஏற்ப அரசாங்க ஊழியர்களின் சம்பளமானது போதாமையினாலும் எனவே மாதாந்த சம்பளத்தில் 20 ஆயிரம் ரூபாயினை அதிகரிக்க கோரியே குறித்த போராட்டமான இடம் பெற உள்ளது.
மேலும் பல்வேறு விதமான நெருக்கடிகளின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாரண இலங்கை மக்கள் வெகு விரைவில் போராட்டங்களில் ஈடுபடுவார்கள் என பல தரப்பினரும் தற்போது எச்சரித்து வருகின்றனர்.
அந்த அளவிற்கு பொருளாதார நெருக்கடியினால் அதிகரித்த பொருட்களின் விலைவாசி இருக்கின்றது.