Srilanka News

பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியி என ஏமாற்றிய Everest FM !! இலங்கையில் நடந்தேறிய பெரும் மோசடி சம்பவம்??

இலங்கையில் சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாக இசை நிகழ்ச்சி என ஆன்லைன் இல் பிடித்த பாடலினை இரண்டு நிமிடத்திற்கு குறையாமல் வீடியோ செய்து அனுப்புமாறு கூறி நிகழ்ந்த மோசடி சம்பவம் ஒன்று தற்போது நேற்றைய தினம் இலங்கையை இல் நடந்தேறி உள்ளது.

உங்கள் திறமையை உலகறியச் செய்யும் எவரெஸ்ட் வானொலியின் திறமைக்கான அத்தியாயம் என கூறி,

மன்னார் மாநகர சபை இன் மண்டபத்திலே மாபெரும் இறுதி சுற்று நடைபெறும் எனவும் இதன் போது எவரெஸ்ட் எம் அறிவித்திருந்தது.

மேலும் இந் இசை நிகழ்ச்சியில் முன்னணி பாடகர்கள் நடுவர்களாக பங்கு கொள்வார்கள் எனவும்.

நீங்கள் இலங்கையில் எங்கு இருந்தாலும் இறுதி சுற்று போட்டிகளில் கலந்து கொள்ள முடியும் என்பதும் , மேலும் உங்களது விபரத்தினை பெயர் மாவட்டம் அதனைத் தொடர்ந்து உங்களது பாடலை வீடியோ ரெக்கார்ட் செய்து எவரெஸ்ட் FM இலக்கத்திற்கு அனுப்ப சொல்லி போட்டிக்கான ஆரம்ப கட்ட பணிகள் நடத்தப் பட்டன.

மேலும் இதன் போது தெரிவு ஆகும் வெற்றியாளர்களுக்கு தலா முதல் பரிசாக ரூபாய் 50,000 ரூபாவும் இரண்டாம் பரிசாக முப்பதாயிரம் ரூபாய் உம் மேலும் மூன்றாம் பரிசாக இருபதாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் ,

மேலதிகமாக பதினைந்து வெற்றியாளர்களுக்கு விருதும் வழங்கப்படும் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந் நிலையில் சொன்னது போல் நேற்று மன்னார் மாநகர சபையில் இறுதிசுற்று போட்டிக்கான நிகழ்வுநடைபெற இருந்தது.

ஆனால் தொடக்கத்திலே மக்களுக்கு சற்று ஏமாற்றமே அளித்தது. ஏனென்றால் 8 மணிக்கு ஆரம்பமாகும் எனக் கூறிய இந் நிகழ்ச்சியானது 11 மணி ஆகியும் ஆரம்பிக்கப் படவில்லை எனவும்,

அதன் பின்னர் இசைக்கு சம்மந்தம் இல்லாத நடுவர்கள் அமர்த்தப்பட்டு இந் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதாக தெரிய வருகின்றது.

மேலும் முன்னணி பாடகர்கள் நடுவர்களாக இருப்பார்கள் எனக் கூறிய போது ஆரம்ப நிகழ்வு சற்று ஏமாற்றம் அளித்தது மக்களுக்கு.

எவரெஸ்ட் FM இசை நிகழ்ச்சி மோசடி…

மேலும் நிகழ்ச்சியில் பங்கு பற்றி வீடியோ அனுப்பியவர்களுக்கு தலா 1850 ரூபா பணத்திணையும்,

மேலும் பார்வையாளர்களுக்கான ரூபாய் 400 பணத்தினை மோசடி கும்பல் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந் நிலையில் ஏமாற்றம் அடைந்த போட்டியாளர்கள் ஆல் ஆரம்பமான நிகழ்ச்சியில் தகராறுகளால் ஏற்றப்பட்டது .

இதன் போது பல குண்டர்கள் போட்டியாளர்களை அடக்கி உட்கார வைத்த சம்பவமும் நடந்தேறி உள்ளது.

இதனை அடுத்து கொந்தளித்த போட்டியாளர்கள் உடனடியாக மன்னார் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அனுப்பி உள்ளனர்.

இதனை அடுத்து உடனடியாக விரைந்த மன்னார் போலீஸ் உத்தியோகத்தர்கள் இது குறித்து விசாரித்து வருகின்றனர் .

மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட இந் நிகழ்ச்சியிலே,

சுமார் பல லட்சக்கணக்கான பணங்களை மக்கள் இழந்துள்ளதாகவும்.

மேலும் திருவோணமலை மாவட்டத்திலே பல இசை நிகழ்ச்சியில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவியை கூட்டி வருவதற்கு பிரதேச மக்கள் ஒன்று திரண்டு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தினை செலவழித்து அங்கிருந்து பேரூந்து மூலம் மன்னாருக்கு வருகை தந்து உள்ளனர்.

மேலும் தமிழ் பேசும் மக்கள் திருகோணமலை ,முல்லைதீவு ,யாழ்ப்பாணம் ,மன்னார் ,கண்டி,நுவரெலியா ,மாத்தறை என்று இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து 1000 இற்க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இவ் இறுதி சுற்று போட்டியில் கலந்து கொண்டு உள்ளனர் .

இருப்பினும் இவ் மோசடி கும்பல்களால் அனைவரும் ஏமாற்றப்பட்ட நிலையை தற்போது மிஞ்சி காணப்படுகின்றது.

எவரெஸ்ட் எப் எம் என்ற பதிவு செய்யப்படாத வானொலி ஊடாக face புக்,வாட்ஸாப்ப் ஆகிய சமூக வலைத்தளங்கள் ஊடாக எந்த வித இசையுடன் சம்பந்தப்படாத நபர்களினால் இம் மோசடி சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

மேலும் எவ் வித பதிவு செய்யாத ஊடகங்கள் வாயிலாக நடை பெறுகின்ற மோசடிகளில் இருந்து மக்கள் சற்று கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.

Related Articles

Back to top button