யாழில் 12 வயது சிறுமியின் சடலம் மீட்பு… நடந்தது என்ன?
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திருநெல்வேலிப் பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து 12 வயது சிறுமியின் சடலம் ஒன்று மீட்கப் பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்றைய தினம் முற்பகல் வேளையில் நாடு முழுவதும் தீயாய் பரவியது. குறித்த சிறுமி தனது பாட்டிருடனேயா
விடுதியில் தங்கியிருந்ததாக குறித்த விடுதி காப்பாளர் தெரிவித்து உள்ளார்.
மேலும் சடலமாக யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட சிறுமியானவர் சுமார் 3 நாட்களுக்கு முன்னதாக வே இறந்திருக்கலாம் என பொலிஸ் தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.
இச் சம்பவம் ஆனது கொலையா அல்லது தற்கொலையா என்னும் கோணத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால் இது கொலையாக இருப்பதற்குரிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இது குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் இது வரை வெளியாகவில்லை.
மேலும் இந்த துயரச் சம்பவம் இலங்கை மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறான கொலை மற்றும் தற்கொலை சம்பவங்கள் இலங்கையில் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.