கண் நோய் காரணமாக உடனடியாக மூடப்பட்ட பாடசாலையின் வகுப்பு.. எச்சரித்த சுகாதாரத்துறை…
இலங்கையின் கொழும்பில் உள்ள பல பகுதிகளிலும் கண் நோய் தொடர்பான நோய்கள் சிறுவர்களுக்கு பரவுவதான தகவல்களை தற்போது சுகாதாரத் துறையானது செய்தியினை வெளியிட்டு மக்களுக்கு எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
இந் நிலையில் இலங்கையின் யட்டியந்தோட்டை பிரதேசத்தில் காணப்படுகின்ற பாடசாலையிலே ஐந்தாம் தர வகுப்பறை ஒன்று தற்போது மூடுவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
குறித்த வகுப்பறை மூடலானது கண்நோய் தொடர்பாகவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலை வட்டாரம் தற்போது தகவலினை தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து குறித்த தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கண் நோய் ஏற்படுவதனை கருத்தில் கொண்டே இவ்வாறான தீர்வு எடுக்கப்பட்டதாக அப் பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதாரப் பரிசோதகர் தற்போது தெரியப்படுத்தி இருக்கின்றார்.
இந் நிலையில் அந்த வகுப்பறையில் சுமார் 13 மாணவர்களுக்கு குறித்த கண்ணோய் இருப்பதாகவும் தெரியப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ஏனைய மாணவர்களுக்கு குறித்த நோய் பரவுவதனை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் பாடசாலை முழுவதுமான இந் நோய் கட்டுக்கோப்புக்குள் கொண்டு வருவதற்காகவும் மாணவர்களின் உடல் நலத்தை பேணுவதற்காகவும் குறித்த தீர்மானமானது உடனடியாக எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இந் நிலையில் இலங்கையின் பல பகுதிகளிலும் குறிப்பாக கொழும்பைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் சிறார்களுக்கு இவ்வாறான கண் நோய் பரவி வருகின்றதாகவும்,
மற்றும் இது தொடர்பில் எவ்வித அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் சுகாதாரத் துறையானது தற்போது தெரிவித்து இருக்கின்றது.
இருப்பினும் குறித்த நோய் அறிகுறியானது தங்களது சிறார்களுக்கு காணப்படுமாயின் குறித்த சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்புவது தொடர்பாக பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.