மட்டக்களப்பில் திடீரென வீதிக்கு இறங்கி தீபந்தம் ஏந்தி போராடும் மக்கள்….
இலங்கையில் மட்டக்களப்பில் இம் மாதம் ஏற்பட்ட மின்சார கட்டண அதிகரிப்பினை தொடர்ந்து மக்கள் அனைவரும் மட்டக்களப்பில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் குறித்த போராட்டமானது ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த தொகுதி அமைப்பாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மற்றும் குறித்த தீப்பந்தம் ஏந்தி அதிகரித்த மின்சார கட்டணத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே! மின் கட்டணத்தை கூட்டாதே! ரணில் ராஜபக்சவை கண்டிக்கின்றோம்..
என்ற பல்வேறு விதமான பதாகைகள் ஏந்தியும் இப் போராட்டத்தில் மக்கள் கலந்துள்ளனர்.
மற்றும் இப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் இயங்கி வருகின்ற ஒரு சில காட்சிகளின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியின் காரணமாக அல்லலுறும் மக்கள் அன்றாட உணவிற்கு கஷ்டப்படும் நிலையில் தற்போது மின் கட்டணமானது அதிகரித்துள்ளமை மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் தற்போது மின்சார கட்டணத்தின் பல்வேறு விதமான மாற்றங்களும் அதிகரித்த கட்டணமும் பாமர மக்களை வறுமையில் வாடும் மக்களையும் அதிகம் பாதிக்கின்றதாகவும் தற்போது தெரிகின்றது.
எனவே இது குறித்து தக்க அதிகாரிகள் முறையாக மக்களுக்கு நீதி கூறும் வகையில் மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பாக எடுத்து ஆக வேண்டும் என்று இக் குறித்து போராட்டம் ஆனது நடைபெற்றிருக்கின்றது.
இன்றைய தினம் மட்டக்களப்பில் நடந்த போராட்டமானது இனிவரும் காலங்களில் நாடெங்கும் நடக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது அந்த அளவிற்கு மின்சார கட்டண அதிகரிப்பு காணப்படுகின்றது.