சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர்கள் நடந்தது என்ன?
அண்மை காலங்களில் இலங்கையில் ஏற்பட்டு வருகின்ற பொருளாதார சிக்கல்கள் காரணமாக அநேகர் இலங்கை நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேறுகின்ற சம்பவம் நாம் அனைவரும் அறிந்ததே.
அவ்வாறு இருக்க தற்போது பல்வேறு நாடுகளிலும் சட்டவிரோதமாக இலங்கையர்கள் குடியேறி வருகின்றனர் .மேலும் இவர்கள் தொடர்பாக எவ்வித தகவல்களும் வெளிவரவில்லை.
இந் நிலையில் தற்போது போலந்து நாட்டில் குடியேறிய சுமார் 160 பேரைக் கொண்ட குழு ஒன்றை தற்போது அந்த நாட்டு அரசு கைது செய்து உள்ளனர் .
இந் நிலையில் இக் குழுவில் இலங்கையர்கள் உள்ளடங்குகிறார்கள் என்று சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து உள்ளன.
மேலும் இவர்களில் சோமாலியா, எகிப்து, எத்தியோப்பியா ஆகிய நாடுகளிலும் இருந்து புலம்பெயர்ந்த நபர்கள் இருப்பதாகவும் தெரியவந்து உள்ளது. இந் நிலையில் இவர்கள் பெலாரஸில் இருந்து போலந்து எல்லையை நோக்கி கடக்க முற்பட்ட நிலையில் போலந்து நாட்டு அரசினால் இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட குழுவிற்கு உதவி செய்த உக்ரேனிய நாட்டைச் சேர்ந்த மூன்று பிரஜைகளும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி சிறிதளவு தளர்ந்த போதிலும் இங்குள்ள விலைவாசிகளின் அளவு 3 மடங்கு அதிகமாக உள்ளது. இதனாலேயே பலரும் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு திட்டமிட்டு வருகின்றனர்.
அவ்வாறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். எவ்வாறாயினும் சட்ட ரீதியில் நாட்டை விட்டு வெளியேறுபவர்களே பாதுகாப்பாக தங்களுடைய எதிர்காலத்தை நோக்கி சென்றடைகின்றனர்.
ஆனால் சட்டவிரோதமாக முறைகளில் ஓர் எல்லையில் இருந்து இன்னும் ஒரு எல்லைக்கு திருட்டுத்தனமாக மாற முற்படுகின்ற பிரஜைகளே தற்போது அதிகமாக இருக்கிறார்கள்
மேலும் இவர்கள் பல இன்னல்களை அனுபவித்து தங்களுடைய எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கிறார்கள்.
ஓர் நாட்டின் எல்லையிலிருந்து இன்னொரு நாட்டிற்கு நுழைவது அவ்வளவு சாதாரணமான செயல் இல்லை எனவே பாதுகாப்பான சட்ட ரீதியான முறைகளை வாயிலாக நாட்டை விட்டு வெளியேறுவோம்.