உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தாக்குதலினை மீளாய்வு செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் கொந்தளிப்பு!!
சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படுத்தலில் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பான செய்திகள் அனைத்திலும் பல்வேறு விதமான மர்மங்கள் அடங்கியுள்ளதாகவே பார்க்கப்படுகின்றது.
அவ் வகையிலே இதில் இடம் பெற்றுள்ள அனைத்து குற்றங்களையும் புரிந்தவர்களை அம்பலப் படுத்த வேண்டும் என்று பல தரப்பு தமிழர்களும் தற்போது வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இதனை அடுத்து இலங்கையின் பாராளுமன்றத்தின் தமிழ் உறுப்பினர்கள் இது தொடர்பாக தங்களது உரையின் போது தாக்குதல் தொடர்பாக மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் கொந்தளித்து வருகின்றனர் .
மேலும் கடந்த வெள்ளிக் கிழமை அதாவது நேற்று இடம் பெற்ற பாராளுமன்ற அமர்விலே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சால்ஸ் நிர்மலநாதன் அவர்கள் ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப் பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
மேலும் அதன் போது அவர் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு முன்னர் வவுனதீவில் தாக்குதல் ஒன்று இடம் பெற்றுள்ளது அத் தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டியிருந்தார்கள் ஆனால் உண்மையில் அதனை யார் செய்தது போன்ற விபரங்களை தற்போது மக்கள் அறிந்து கொண்டுள்ளனர்.
இவ்வாறு தான் அரசியல் சுய லாபங்களுக்காக உயிரைக் கூட பணயம் வைத்து விளையாடி இருக்கும் கும்பல்களை சர்வதேசத்தின் முன்னே முன்னிறுத்த வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
இவ்வாறு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது நடத்தப் பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலின் காரணமாகவே இரட்டை குடியுரிமை பெற்ற கோட்டாபய ராஜபக்சே ஜனாதிபதியாகினார்.
மேலும் இந்த இலங்கை நாட்டில் ஆட்சி புரிகின்ற ஆட்சியாளர்களுக்கு ஏதுவாக புலனாய்வாளர்களும் மற்றும் உயர் அதிகாரிகளும் செய்யப்படுவதனால்,
இதில் எந்த வித உண்மைகளும் காணப்படுவதில்லை இதனாலே சர்வதேச விசாரணையை நாட வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் இவ்வாறான புலனாய்வாளர் அதிகாரிகள் குறிப்பிட்டு காலங்களில் நாட்டை ஆளுகின்ற ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரல்வதற்கு அமைவாகவே இயங்கி வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
தேசிய மட்டத்தில் நீதி கிடைக்காததுனாலே சர்வதேசத்தை தற்போது நாடி வருவதாகவும் தமிழ் மக்களுக்கு உண்மையில் சரியான நீதி கிடைக்க வேண்டும் என அவரது உரையில் குறிப்பிட்டு இருந்தார் .