ஆறு மாத குழந்தையை அடித்தே கொன்ற தாய் கைது!! இலங்கையில் நடந்தேறிய மோசமான சம்பவம்..
இலங்கையில் ஊர்பொக்க – கட்டுவன கெதர எனும் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது பச்சிளம் குழந்தையை சுமார் ஆறு மாதமும் 11 நாட்களும் ஆன கைக் குழந்தையை அடித்து கொன்றதாக தற்போது குறித்த சந்தேக நபர் போலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த தாயானவர் சுமார் 21 வயது உடையவர் எனவும் ஈவிரக்கமின்றி தனது சிசுவை அடித்தே கொண்டுள்ளார் எனவும் தெரியவந்திருக்கின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீஸார் குறித்த சம்பவத்தின் மேலதிக விவரங்களை தெரிவித்துள்ளனர்.
அதில் குறிப்பிட்டாதவது;
கடந்த 30-ஆம் தேதி அன்று குழந்தையை குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் போது தவறுதலாக குழந்தையின் தலையானது சுவரில் மோதியதாக கூறிய படி தாயார் குழந்தையை வைத்தியசாலையில் சேர்த்துள்ளார் .
இருப்பினும் குறித்த ஆறு மாத குழந்தை வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தது.
இதனை அடுத்து குறித்த மரணம் தொடர்பில் சந்தேகம் தெரிவித்த போலீஸ் அதிகாரிகள் இம் மரணம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் குறித்த கைக் குழந்தை தாயாரினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும் இதனாலே குழந்தை வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையிலே இறந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து உடனடியாக சந்தேகத்தின் பெயரில் குழந்தையின் தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.