தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதை பொருட்கள்!!!! சுங்க அதிகாரிகளின் சுற்றி வளைப்பால் பறிமுதலான பல கோடி ரூபாய் பெருமதி வாய்ந்த போதை பொருட்கள்……
தபால் மூலம் இலங்கை முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட போதை பொருட்கள் அடங்கிய பொதிகளை சுங்க அதிகாரிகள் தற்போது கண்டுபிடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
இந் நிலையில் குறித்த பொதிகளில் சுமார் 43 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதை பொருட்கள் சுங்க அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு சுங்க அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது சந்தேகத்திற்கு இடமாக காணப்பட்ட 25 பொதிகளிலே குறித்த போதை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
மற்றும் குறித்த போதை பொருட்கள் அடங்கிய பொதிகைகளானவை கொழும்பு, மஹரகம, பத்தரமுல்லை, பொரலஸ்கமுவ, பாணந்துறை மொரட்டுவ மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மற்றும் இவ் போதைப் பொருட்கள் அடங்கிய பொதிகள் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
குறித்த முகவரிகளில் வாசிக்கும் நபர்களை விசாரணை செய்த பின்னர் அவை போலி முகவரி என தெரிய வந்துள்ளது.
மற்றும் இதன் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட பொதிகளில் 2193 எக்ஸ்டசி என்ற மெத்தம்பெட்டமைன் மாத்திரைகளும், 1740 கிராம் குஷ் போதைப்பொருளும், 29 கிராம் ஆம்பெட்டமைன் மாத்திரைகளும் குறித்த பொதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
இதன் அடிப்படையில் போலியான முகவரிகள் கொடுக்கப்பட்டமையினால் குறித்த போதை பொருட்கள் போதை பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.