இலங்கையில் இருந்து வெளியேறும் மருத்துவர்கள் தொடர்பில் வெளியான தகவல்கள்….. அதிர்ச்சி அளிக்கும் பின்னணி!!!!
இலங்கையில் இருந்து இலங்கை நாட்டின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அதிக மருத்துவர்கள் இலங்கை நாட்டில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறுவது தொடர்பான தகவல்கள் தற்போது அதிகம் பரவி வருகின்றது.
இந் நிலையில் ஆரம்பத்தில் அனேக மருத்துவர்கள் இலங்கையில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.
இந் நிலையில் சுகாதார அமைச்சின் செயலாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்:
தற்போது இலங்கையிலிருந்து வெளிநாடு செல்கின்ற மருத்துவர்களின் எண்ணிக்கையில் பாரியளவு மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்,
மற்றும் வெளிநாடு செல்வது குறித்தான எண்ணிக்கையானது குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
மற்றும் இவ்வாறு வெளிநாட்டுக்கு செல்லும் மருத்துவர்கள் தங்களுக்குரிய மேலதிக படிப்பிற்காகவோ அல்லது வெளிநாடுகளில் வேறு வேலைக்காக சென்று தங்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கு வெளிநாடு சென்ற மருத்துவர்களில் இது வரை காலமும் மீண்டும் நாட்டுக்கு திரும்பும் எண்ணிக்கையானது குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்து இருக்கின்றார்.
இதனை தொடர்ந்து இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு மருத்துவ பயிற்சிகளுக்காக சென்ற மருத்துவர்கள் தற்போது இலங்கை நாட்டை நோக்கி திரும்பி வருவதாகவும் அவர் தெரிவித்து இருக்கின்றார்.
இருப்பினும் நாட்டின் பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும் அதிக வரியின் காரணமாகவும் இலங்கை நாட்டிலிருந்து வைத்திய துறையில் பணியாற்றும் பலர் இவ்வாறு வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.