Srilanka News

எதிர்வரும் காலங்களில் இலங்கை நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்… அதிர்ச்சியில் மக்கள் ……

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் எதிர்வரும் காலங்களில் உணவு பற்றாக்குறை ஏற்படக்கூடும் என தற்போது விவசாய அமைச்சரான மஹிந்த அமரவீர எச்சரித்துள்ளார்.

மேலும் இவ் உணவு பற்றாக் குறையானது அதிகரித்து வருகின்ற காலநிலை மாற்றங்கள் காரணமாகவே ஏற்படக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பயிர்களின் உற்பத்தியில் ஏற்ப்பட்டுள்ள அதீத மாற்றங்களின் காரணமாகவே இவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் .

இலங்கை நாட்டில் சில பகுதிகளில் அதிகரித்து வரும் வறட்சி காரணமாக 70, 000 நெற் பயிர்கள் அழிவடைந்து உள்ளதாகவும் இதன் காரணமாக நெற் பயிரின் உற்பத்தி அளவான வழமையை விட சரிந்துள்ளதாகவும் தெரிகின்றது.

மற்றும் இலங்கையின் பல மாகாணங்களில் பெய்து வருகின்ற கன மழையின் காரணமாக நெற்பயிர்கள் நெட்ப பயிற்சிகள் அறுவடை நெட்ப பயிற்சியை புரிய அறுவடையும் குறைந்துள்ளதாகவும் அழிவடைந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்து இருக்கின்றார்.

இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் அறுவடையானது மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படக்கூடியதாகவும் மற்றும் எதிர்பார்த்த அறுவடையை காட்டிலும் குறைந்த அறுவடையே ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.

இதன் காரணமாகவே இலங்கையில் எதிர் வரும் காலங்களில் உணவு பற்றாக்குறை ஏற்படலாம் என அவர் தெரிவித்து இருக்கின்றார்.

Related Articles

Back to top button