பொருளாதார நெருக்கடியால் அதிகரிக்கும் நோயாளிகள்… தினரும் அரச வைத்தியசாலைகள்!!
இலங்கை நாட்டில் தற்போது இடம் பெறுகின்ற அதீத பொருளாதார நெருக்கடியால் அரச வைத்தியசாலைகளில் நோயாளிகளின் அளவு வெகுவாக அதிகரித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தற்போது தெரிவித்து இருக்கின்றது.
மற்றும் இலங்கையில் நிலவுகின்ற கடுமையான பொருளாதார நெருக்கடியால் தற்போது மருந்துகளின் விலையானது பன் மடங்கு அதிகமாக அதிகரித்து வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் பொதுமக்கள் பலர் தற்போது அரச வைத்தியசாலைகளை நோக்கி விரைந்து தங்களது மருத்துவ தேவையினை பூர்த்தி செய்து கொள்வதாக குறித்த சங்கம் தற்போது தெரிவித்து இருக்கின்றது.
நாளுக்கு நாள் உயர்வடைகின்ற அத்தியாவசிய பொருட்களின் விலையின் காரணமாகவும் மற்றும் அதிகரித்த வட் வரியின் காரணமாகவும் இலங்கை நாட்டில் மருந்துகளின் விலை ஆனது மிகவும் உயர்வடைந்துள்ளது.
இது பொது மக்கள் பலருக்கும் இக்கட்டான நிலைமை ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பொருளாதார நெருக்கடிக்கு முன்னதாக இலங்கையில் 50 வீதமான நோயாளிகள் பொது வைத்தியசாலைகளிலும் மற்றும் வெளி நோயாளர் பிரிவிலும் சென்று கொண்டிருந்தனர்.
மீதமுள்ள 50 வீதமானவர்கள் தனியார் வைத்தியசாலைகளில் தங்களுடைய மருத்துவ தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டிருந்தனர்.
இருபினும் இப்போது உள்ள காலகட்டங்களில் அதிகமான நோயாளர்கள் அரச வைத்தியசாலைக்கு செல்லும் அளவானது அதிகரித்து இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே நோயாளிகளுக்கு என அத்தியாவசியமாக பயன்படுத்தப்படுகின்ற முக்கிய மருந்துகளின் விலையினை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வைத்திய அதிகாரிகள் வட்டாரம் தற்போது தெரிவித்து இருக்கின்றது.
மற்றும் இவ்வாறான நிலைமையானது தொடருமாயின் அரச வைத்தியசாலைகளில் மருந்துகளின் தீவிர பற்றாக்குறையானது ஏற்படக்கூடும் எனவும் குறித்த சங்கம் தெரிவித்து இருக்கின்றது.
மேலும் இது தொடர்பாக ஏற்கனவே கடந்த வருடத்தில் ஜனாதிபதி மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு என தனித்தனியே பிரேரணை அனுப்பி வைக்கப் போதிலும் இதுவரை காலமும் அதற்குரிய எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.