இலங்கையில் ஆகாயத்திலிருந்து விழுகின்ற வெள்ளை நிற அதிசய பொருள்…
இலங்கையில் ஆகாயத்திலிருந்து சில பகுதிகளில் சுமார் இரண்டு தினங்களாக அதிகாலை வேளையில் வானத்திலிருந்து இருந்து அதாவது வான் பரப்பிலிருந்து மர்ம பொருள் ஒன்று விழுவதால் அப் பகுதி மக்கள் சற்று குழப்பம் அடைந்துள்ளனர்.
திம்புலாகல, நுவரகல, யக்வெவ, யக்குரே, மனம்பிட்டிய, சிறிபுர ஆகிய பகுதிகளிலேயே இம் மர்ம பொருளான வெள்ளை நிறமான சிலந்தி வலை போன்ற வெள்ளை நூல் விழுவதினால் அப்பகுதி மக்கள் அப்பொருள் என்னவென்று தெரியாது சற்று குழப்பம் அடைந்து இருக்கின்றனர்.
இதனை அடுத்து இவ்வாறு இலங்கையில் ஆகாயத்திலிருந்து விழுகின்ற வெள்ளை பொருளினால் குறித்த பிரதேசத்தில் காணப்படுகின்ற பாடசாலைகளை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து குறித்து மர்ம பொருளினை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகார சபைக்கு கொழும்பிற்கு அனுப்பி குறித்த பொருள் தொடர்பான பரிசோதனைகள் ஆரம்பிப்பதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சிலந்தி வலை போன்ற இப் பொருளானது காலை வேளையில் வான் பரப்பிலிருந்து பெருமளவில் விழுவதாகவும் மற்றும் இவைகள் ஆங்காங்கே மின் கம்பிகள் மற்றும் செடிகளில் விழுந்து காணப்படுவதாகவும் குறிப்பிட்ட பிரதேச வாசிகள் தகவலினை தெரிவிக்கின்றனர் .
மேலும் இவ் வெள்ளை நிற பொருளானது சில நொடிகளில் கரைந்து விடுகின்றது என குறிப்பிட்ட பிரதேசங்களில் வாழுகின்ற விவசாயிகளும் குறிப்பிட்டுள்ளனர்.
இது என்னவென்று தெரியாத தற்போது மக்கள் இது தொடர்பாக குழப்பத்தில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.