போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதான ஆறு பேர்!!யாழ்ப்பாண போலீசாரின் சுற்றுவளைப்பு நடந்த கைது நடவடிக்கை!!!
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியை சேர்ந்த நெல்லியடி போலீஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருள் குற்றச்சாட்டில் சுமார் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே சமயம் குறித்த ஆறு நபர்களிடம் இருந்தும் பல லட்சம் பெறுமதியான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களில் சுமார் மூன்று பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதாகவும்,
ஏனைய மூவர் திருட்டு சம்பவத்துடன் கைதானவர்கள் எனவும் போலீசார் தகவல்களை வெளியிட்டு இருக்கின்றனர்.
மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைதான மூன்று நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக 14 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தகவலினை வெளியிட்டு இருக்கின்றனர்.
திருட்டு சம்பவத்தின் போது மேலதிகமாக இரண்டு பெண்களும் மற்றும் ஆணொருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் நேற்றைய தினம் பிற்பகல் வேளையில் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆபத்தான மது மற்றும் போதைப் பொருள் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதாகி உள்ளதும் மற்றும் இன்றைய தினம் இவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.