யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் போதை பொருள் பாவனை…..யாழில் நுரையீரல் மற்றும் இருதய பிரச்சனைகளால் அவதியுறும் போதை பொருள் வாசிகள்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்….
தற்போது வடமாகாண மாவட்டங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் போதை பொருள் பாவனையினால் நுரையீரல் மற்றும் இருதய வாழ்வுகளில் பிரச்சனைகள் அதிகரித்து காணப்படுவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வட்டார வைத்திய அதிகாரிகள் தற்போது தகவலினை தெரிவித்து இருக்கின்றனர்.
மற்றும் இதில் சோகத்திற்குரிய விடயம் என்னவெனில் இவ்வாறு நுரையீரல் மற்றும் இருதய பிரச்சனைகளினால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருகின்ற நபர்களில் பெருமளவான நபர்கள் 25 வயதிற்கும் குறைந்தவர்கள் எனவே கூறப்படுகின்றது.
மற்றும் அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் வெளிநாட்டு பிரயாணங்களை செய்வதற்கு இளைஞர்களில் பலர் மருத்துவ சான்றிதழை பெற்றுக் கொள்வதற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தருகின்றதாகவும் அதிலே இவ்வாறு பரிசோதனை மேற்கொள்கின்றபோது நுரையீரல் மற்றும் இருதய வாழ்வு தொற்றுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நபர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் வைத்தியத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
குறித்த நபர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இவர்கள் அனைவரும் ஊசி மூலம் போதை பொருளை நுகர்வோர்கள் என தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதேபோல் சுவாச பிரச்சனைகளுடன் மற்றும் கடுமையான காய்ச்சலுடன் போதனா வைத்தியசாலைக்கு வருகின்ற இளையோர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் அடிப்படையில் அவர்களுக்கும் இருதய வாழ்வு தொற்று ஏற்பட்டுள்ளதும் மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
இவர்களும் ஊசி மூலம் போதை பொருட்களை பாவனை செய்பவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
மற்றும் இவ்வாறு போதை பொருள் பாவணையின் காரணமாக வைத்தியசாலைக்கு வரும் இளையோர்களின் எண்ணிக்கையானது நாளாந்தம் அதிகரித்த வண்ணம் இருப்பதோடு சராசரியாக மூன்று நபர்கள் தினசரி இவ்வாறு வைத்தியசாலைக்கு வருகின்றனர் எனவும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மற்றும் இவ் போதை பொருள் பாவணையின் காரணமாக கடந்த வருடத்தில் அதாவது ஊசி மூலம் போதை பொருளை பாவித்து அதன் காரணமாக 15க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளதாக மருத்துவத்துறை தற்போது குறிப்பிட்டு இருக்கின்றது.
இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரிக்கும் போதை பொருளின் பாவனையினால் யாழ் மாவட்டம் மட்டும் இன்றி இலங்கையின் பல்வேறு விதமான இடங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.