வரலாற்றில் முதல் முறையாக யாழ் மாவட்டத்தில் அதி கூடிய புள்ளிகளை பெற்று தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் வரலாற்றுச் சாதனை படைத்த மாணவி….
நேற்றைய தினம் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்குறிய பெறுபேறுகள் வெளியாகி இருந்தது. இந் நிலையிலே யாழ்ப்பாணத்தில் வரலாற்றில் முதல்முறையாக அதிகூடிய புள்ளிகளை பெற்று யாழ் மாவட்டத்தின் யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவி ஒருவர் சாதனையினை நிலைநாட்டில் இருக்கின்றார்.
குறித்த மாணவி 2023 ஆம் ஆண்டிற்கான இந்த வருட புலமைப் பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் ஜெராட் அமல்ராஜ் கனிஷ்கா என்ற மாணவியே வரலாற்றில் அதிகூடிய புள்ளிகளை பெற்று இதுவரை காலமும் யாரும் பெற்றிடாத அதிகூடிய புள்ளிகளை பெற்று யாழ் மாவட்டத்திற்கு மட்டுமின்றி பாடசாலைக்கும் பெருமை சேர்த்திருக்கின்றார்.
மற்றும் குறித்த கல்லூரியில் சுமார் 110 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்று இருந்ததாகவும் இதில் 35 மாணவர்கள் பரீட்சையில் சித்தி அடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்திருப்பதாகவும் குறித்த பாடசாலை வட்டாரம் தற்போது தகவலினை தெரிவித்துள்ளது.
மற்றும் குறித்த அதிகூடிய புள்ளிகளை பெற்று யாழ் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வைத்த மாணவி உரையாற்றும்போது;
தன்னைப் போன்று எதிர்காலத்தில் பல மாணவர்கள் அதிகூடிய புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமையை தேடி தர வேண்டும் எனவும் மற்றும் தனது எதிர்கால லட்சியம் விஞ்ஞானியாக வரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.