Srilanka News

இலங்கையில் நேற்று பதிவாகிய நிலநடுக்கம்…

இலங்கையில் நேற்று இரவு புத்தல பிரதேசத்திற்கு அருகாமையில் சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியாகும் அறிக்கை ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளது.

இவ் அறிக்கையின் மூலம் குறிப்பிட்டு நிலநடுக்க பதிவானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்று இரவு சுமார் 11. 20 மணி அளவில் குறித்த நிலநடுக்க அதிர்வானது சுமார் 2.4 ரிக்டர் அளவுகளில் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .

மேலும் இந் நிலநடுக்கத்திற்கு முன்னதாக குறித்த பிரதேசத்தில் ஏற்கனவே சிறிய நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக பல்வேறு விதமான உயிர்களை இவ்வருடம் இழந்த பல செய்திகளை ஊடகங்கள் வாயிலாக அறியக்கூடியவாறு இருந்தது.

அவ் வகையில் பாரிய நிலநடுக்கத்தினை எதிர்கொள்ளும் போது அருகாமையில் உள்ள சில நாடுகளிலும் இவ்வாறான சிறிய ரிக்டர் அளவுகளிலான நிலநடுக்கம் உணரப்படுவது வழக்கம்.

அவ் வகையிலே இந் நிலநடுக்கத்தின் அதிர்வு பதிவும் பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button