ஒரே நாளில் கைதான 83 நபர்கள்!! வெளியான அதிர்ச்சி தகவல்…
இலங்கை நாட்டில் ஒரே நாளில் குற்றங்களை புரிந்ததாக தேடப்பட்டு வந்த சுமார் 83 நபர்கள் கைதாகி உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரான டிரான் அலஸ் அவர்கள் தற்போது தெரிவித்து இருக்கின்றார்.
இலங்கையில் இடம் பெற்ற இச் சம்பவமானது நாடளாவிய ரீதியில் இலங்கை பொலிஸாரினால் மேற் கொள்ளப்பட்ட விசேட பாதுகாப்பு நடவடிக்கையின் போது இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவ் நடவடிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது இதனை அவர் கூறியிருக்கின்றார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் இலங்கை நாட்டில் அதிகரித்து வருகின்ற போதை பொருள் மற்றும் பாதாள குழுக்களை ஒழிப்பதற்குரிய விசேட நடவடிக்கையின் முதல் கட்டமாக நேற்று முதல் பொலிஸாரினால் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து இருக்கின்றார்.
இச் சம்பவத்தின் போது அதிரடியாக நாட்டில் ஒரே நாளில் சுமார் 83 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
மற்றும் இவர்களில் சுமார் 45 பேர் இலங்கை நாட்டில் நடைபெறுகின்ற போதைப்பொருள் குற்றங்களுக்காக போலீசாரிடமிருந்து மறைந்து வாழ்ந்து வந்தவர்கள் எனவும் மற்றும் இவர்கள் அனைவரும் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்கள் எனவும் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
இவ்வாறு நாட்டில் நடைபெறுகின்ற குற்ற செயல்களை படிப்படியாக குறைப்பதற்கு இலங்கை பொலிசாரினால் இச் செயற்ப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.