யாழ் நகரில் பிரபல ஹோட்டல்களுக்கு சீல்….
யாழ் நகரில் நான்கு பிரபல ஹோட்டல்களுக்கு சுகாதார பரிசோதனையின் பின்னர் சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த ஹோட்டல்கள் சுகாதார முறையற்ற நடவடிக்கைகளில் உணவினை தயாரித்து பொது மக்களுக்கு விநியோகித்ததன் காரணமாகவே குறித்த 4 ஹோட்டல்களும் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மற்றும் யாழ் மாநகர சபையின் வண்ணார்பண்ணை பகுதியின் சுகாதார பரிசோதகர் ஆன தி.கிருபன் அவர்களின் தலைமையிலான குழுவினரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த நான்கு ஹோட்டல்கள் கே கே எஸ் வீதி இராமநாதன் வீதி ஆகிய இரு வீதிகளில் அமையப் பெற்றுள்ள ஹோட்டல்கள் மற்றும் பேக்கரி போன்ற உணவு தயாரிக்கும் இடங்கள் என தெரியவந்துள்ளது .
நியமிக்கப்பட்ட குழுவினரினால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே குறித்து சீல் வைப்பு நடைபெற்றுள்ளது.
இந் நிகழ்வு நடைபெறுவதற்கு முன்னரே பல தடவைகள் குறித்த நான்கு உணவகங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனை பொருட்படுத்தாது சுகாதார சீர்கேட்டுடன் உணவினை தயாரித்ததினாலே குறித்த சுகாதார பரிசோதகர் சீல் வைத்துள்ளார் .
மற்றும் இதன் போது சுமார் மூன்று ஹோட்டல்களும் ஒரு பேக்கரியும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார பரிசோதனையினை அடுத்து குறித்த சுகாதார பரிசோதகரினால் யாழ் நகரில் மூன்று ஹோட்டல்களுக்கும் மற்றும் ஒரு பேக்கரிக்கும் எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து வழக்கினை விசாரித்த நீதவான் அவர்கள் குறித்த நான்கு உணவு உற்பத்தி செய்யும் நிலையங்களும் திருத்த வேலைகளை செய்து முடித்த பின்னால் மீண்டும் இயங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை அடுத்த மாதம் நீதவான் அவர்கள் ஒத்தி வைத்துள்ளார்.
மற்றும் இதனைத் தொடர்ந்து நீதவானின் உத்தரவில் சுகாதார பரிசோதகர் குறித்த மூன்று ஹோட்டல்களும் மற்றும் ஒரு பேக்கரியும் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.