வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பாக பொலிஸார் ஏற்படுத்திய விழிப்புணர்வு!!! எச்சரிக்கப்பட்ட பொது மக்கள்…
தற்போது இலங்கை நாட்டில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு என கூறி பல வகையான மோசடி சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றது.
அதிலும் அதிகமாக சமூக வலைத்தளங்களில் போலியான விளம்பரங்களை பல பொதுமக்கள் நம்பிக்கையுடன் நம்பி ஏமாந்து வருகின்றனர்.
எனவே இவ்வாறான போலியான வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பான விளம்பரங்களில் சிக்கி ஏமாந்து போக வேண்டாமே தற்போது இலங்கையின் பொலிஸ் தலைமையகமானது கேட்டுக் கொண்டுள்ளது.
மற்றும் வெளிநாடுகளுக்கு சரியான முறையில் தொழில் வேலையினை செய்வதற்கு சென்றால் அவ்வாறான நபர்களிடம் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் போது நாடு கடந்த பிரச்சினைகளில் தலையிட முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான நிஹால் தல்துவ என்பவர் தெரிவித்து இருக்கின்றார்.
இருப்பினும் சட்ட விரோதமாக செல்லப்படும் நபர்கள் மற்றும் இவ்வாறு போலியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு என நம்பி சிக்கிக் கொண்டவர்களில் பலர் மியன்மாரில் உள்ள அடிமை முகாம்களுக்கு கடத்தப்படுவதான சம்பவம் தொடர்பாக இலங்கை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலே குறித்து போலி வேலைவாய்ப்புகளை நம்ப வேண்டாம் என ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றார்.
இந் நிலையில் மியன்மாரில் கடந்த சில நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 56 இலங்கையர்கள் குறிப்பிட்ட முகாம்களுக்கு கடத்துவதற்குரிய செயற்பாடுகளில் சம்பந்தப்பட்ட சீனப் பிரஜையானவர் மற்றும் பிரதான சந்தேக நபர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் குறிப்பிட்ட 56 இலங்கையர்களும் சைபர் குற்றப்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களில் சுமார் 56 நபர்களுக்கு அதிகமாக இலங்கையர்கள் இருக்கலாம் என மியன்மாரின் இலங்கைக்கான முன்னாள் தூதுவரின் செயலாளர் அவர்கள் தற்போது தெரிவித்து இருக்கின்றார்.
எனவே போலியான வேலை வாய்ப்புகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்துமாறு பொலிஸார் இலங்கை மக்களுக்கு எச்சரித்து இருக்கின்றனர்.
மற்றும் இவ்வாறான மோசடி கும்பல்கள் பலர் பொது மக்களை ஏமாற்றி வேறு விதமான குற்ற செயல்களை புரிவதற்கு இவர்களை பயன்படுத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.