Srilanka News

வைத்தியசாலையின் அட்டூழியங்களால் இலங்கையில் அதிகரிக்கும் உயிரிழப்பு!! யாழ் சிறுமியை தொடர்ந்து மட்டக்களப்பு யுவதிக்கு நேர்ந்த சோகம்…..

இலங்கையில் தற்போது அரச வைத்தியசாலையின் ஊழியர்களின் முறையற்ற கண்காணிப்பு மற்றும் அசமந்தபோக்கின் காரணமாக பல்வேறு விதமான அசெளகரியங்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் மருத்துவமனைக்கு செல்லும் பொது மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்த வகையில் இலங்கையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுமி ஒருவருக்கு கனுலா முலம் அஜாக்கிரதையாக செலுத்தப்பட்ட ஊசி மூலம் சிறுமியின் மணிக்கட்டு பகுதியின் கீழுள்ள கைப் பகுதி அகற்றப்பட்ட சம்பவம் இலங்கையை உலுக்கியது.

இதனை தொடர்ந்து தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் யுவதி ஒருவர் சர்ச்சைக்குரிய முறையில் மரணமடைந்துள்ளார்.

குறித்த யுவதியின் தாயார் குறிப்பிட்டதாவது தனது மகள் தோல் நோயின் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வந்ததாகவும்,

அதற்காக வைத்தியசாலையில் மாத்திரைகள் வழங்கப்பட்ட நிலையில் தீடீரென இன்று உயிரிழந்ததாகவும் தெரிவிக்கிறார் தாயார் அவர்கள்.

வைத்தியசாலையின்

மேலும் இது குறித்த மேலதிக தகவல்கள் பிரேத ப‌ரிசோதனை‌யின் பின்னரே தெரியவரும்.

தற்போது இலங்கையில் வைத்தியசாலைகளில் நடைபெறுகின்ற அநியாயமான மரணங்களும் மற்றும் கவன இன்மையின் காரணமாகவும் இலங்கையின் அரச வைத்தியசாலைகள் தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பேசும் பொருளாக மாறி உள்ளன .

தற்போது இலங்கையில் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள அரச வைத்தியசாலைகளில் திறமான மருந்துகள் இல்லாத இருப்பதினால் அதாவது தரம் குறைந்த மருந்து பொருட்களை சொற்ப லாபங்களுக்காக கொள்வனவு செய்து அதனை பயன்படுத்தி வருகின்ற அமையு இதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

இது முற்றிலும் அரசாங்கமே பொறுப்பு என்பதும் தெள்ளத்தெளிவாக விளங்குகிறது . அதே நேரம் மருத்துவத்துறையில் தற்போது இயங்கி வருகின்ற ஒரு சில பொறுப்பற்ற மருத்துவ ஊழியர்களின் காரன் காரணமாகவும் இவ்வாறான பல அசம்பாவிதங்கள் இலங்கையின் அரச வைத்தியசாலையின் நோயாளர்களுக்கு ஏற்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்

Related Articles

Back to top button