பிரதி அதிபரால் பாலியல் சேட்டைக்கு உள்ளான மாணவி… கொந்தளித்த பெற்றோர்!!
இலங்கையின் காலி மாவட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவரை குறித்த பாடசாலையின் பிரதி அதிபர் பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி மாவட்டத்தின் பாடசாலை ஒன்றிலே ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரையே இவ்வாறு குறித்த பிரதிஅதிபர் சிறுமி மீது பாலியல் சேட்டை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த சம்பவத்தினை தொடர்ந்து உடனடியாக பெற்றோருக்கு அறிவித்தார் மாணவி.. அதன் பின்னர் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் பிரதிஅதிபர் மீது முறைப்பாடு செய்துள்ளனர்.
பாடசாலையிலே பிரதி அதிபராக பணி புரிகின்ற நபரானவர் மாணவியினை வன்புணர்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேல் நேற்றைய தினம் கராப்பிட்டிய சட்ட வைத்திய அதிகாரியிடம் சிறுமியை முற்படுத்திய பின்னால் குறித்து அதிபரான ஹபராதுவ போலீசாரினாள் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த பிரதிஅதிபர் 59 வயதான நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றும் இவரை காலி மாவட்டத்தின் நீதவன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .