75 ஆவது வயதில் தங்கப் பதக்கம் வென்ற முல்லைதீவு வீராங்கனை…..
![](https://thamilwaves.com/wp-content/uploads/2023/11/Thamilwaves-National-Masters-Seniors-Athletics-780x470.jpg)
தனது 75 ஆவது வயதில் அண்மையில் நடை பெற்ற நேஷனல் மாஸ்டர் & சீனியர் அத்லெடிக் போட்டியில் இலங்கையின் முல்லை தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் சுமார் இரண்டு தங்க பதக்கங்களை பெற்று வெற்றியீட்டி உள்ளார்.
![75](https://thamilwaves.com/wp-content/uploads/2023/11/Akilathirunayaki-Thamilwaves.jpg)
மற்றும் இவர் முல்லைத்தீவின் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த அகிலதிருநாயகி என்பவரே என்பதும் தெரிய வந்துள்ளது.
இவர் தனது 75 வது வயதிலேயே குறித்த போட்டியில் பங்கு பெற்றி சாதனை படைத்துள்ளார்.
மற்றும் குறித்த வீராங்கனை ஓய்வு பெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் எனவும் தெரியவந்துள்ளது.
இவர் குறித்த போட்டியில் கலந்து கொண்டது மட்டும் இன்றி 1500 மீட்டர் மற்றும் 5000 மீட்டர் விரைவு நடை போட்டியில் இரண்டு தங்க பழக்கங்களையும் அதனை தொடர்ந்து 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கல பதக்கத்தையும் வென்று சாதனையினை நிலைநாட்டி இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது .