Srilanka News
இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்…..
இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் குறித்து தற்போது இலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றது.
அவ் வகையில் இலங்கையின் கண்டி பிரதேசத்தில் பெண்ணொருவர் மது போதையில் முச்சக்கர வண்டியை செலுத்தி போக்குவரத்து பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது கண்டி A 26 மஹியங்கனை வீதியில் இடம் பெற்று இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு மது போதையில் முச்சக்கர வண்டியை செலுத்தி கைதான பெண்ணானவர் தெல்தெனிய வாகாலை பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் குறித்த பெண் 33 வயதிடையவர் என்பதும் வெளியாகி இருக்கின்றது.
குறித்த பெண்ணை பொலிஸார் தெல்தெனிய நீதிமன்றத்தில் குற்றம் தொடர்பாக ஆஜர்படுத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.