குற்ற செயல்களுடன் தப்பிச்சென்ற இலங்கையர்கள்…. இன்டர்போல் விடுத்த விசேட எச்சரிக்கை!!
இலங்கையில் பாரிய குற்ற செயல்களுடன் சம்பந்தப்பட்ட சுமார் 88 நபர்கள் இலங்கை நாட்டை விட்டு தப்பி சென்றதாகவும் மற்றும் இவர்கள் குறித்து இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீசார் விசேட எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர் என தற்போது செய்திகள் பரவலாக பரவி வருகின்றது.
இந்நிலையில் சுமார் 88 இலங்கையை நபர்கள் இலங்கையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு விட்டு அதிலிருந்து மீண்டு தப்பித்துக் கொள்வதற்காக தப்பிச் சென்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு எதிராக இன்டர் போல் நீல அறிவிப்பினை வெளியிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாக இருக்கின்றது.
இது தொடர்பில் இலங்கை போலீஸாருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
இதே போல் இலங்கையில் இருந்து சுமார் 41 போதை பொருள் வர்த்தகர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், இவர்களுக்கு எதிராக இன்டர் போல் ஆனது சிவப்பு எச்சரிக்கை இனையும் விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
மற்றும் இவ்வாறு இன்டர் போலினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நபர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டு வழக்குகள் தொடர்ந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது .
மற்றும் இவர்கள் 41 பேரும் பின்னர் இலங்கை போலீசாரிடம் ஒப்படைக்கப் படவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .