Srilanka News

யாழ் விமான நிலையத்தின் உட்கட்டமைப்பு தொடர்பாக எழுந்துள்ள கேள்வி…….

இலங்கையின் வட பகுதியில் இயங்கி வரும் யாழ் விமான நிலையம் ஆனது சுமார் 4 வருடத்திற்கு மேலாக இயங்கி வருகிறது.

மேலும் இவ் விமான நிலையம் ஆனது இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாகும்.

இருப்பினும் யாழ் விமான நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் போதாமையாக உள்ளதாக பயணிகளினால் தற்போது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இவ் விமான நிலையத்தில் வெளியூர் சேவையாக இந்தியா மற்றும் யாழ்ப்பாணம் இடையே விமான போக்குவரத்து இடம் பெறுவதுடன், உள்ளுர் சேவையாக யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு இடையே வான் வழி போக்குவரத்தும் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

மற்றும் குறித்த இரு வான் வழி பயணங்களில் அதிகளவான மக்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பயணிகளை அழைத்துச் செல்ல மற்றும் வழியனுப்புவதற்கு என்று விமான நிலையம் செல்கின்றவர்களுக்கான இருப்பிட வசதியானது இல்லை எனவும் தற்போது வரை மரங்களுக்கு கீழாகவே அமர்ந்து குறித்த செயல்களில் ஈடுபடுவதாகவும் பயணிகள் தெரிவித்து வருகின்றனர்.

மற்றும் இவ்வாறான அசௌகரியங்களை பயணம் மேற்கொள்கின்ற நபர்களும் சோதனையின் பின்னர் அமர்ந்திருப்பதற்கான வசதிகள் இன்றி பல்வேறுபட்ட இடர்பாடுகளை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

மற்றும் வெயில் காலங்களில் இவ்வாறு மரங்களுக்கு அடியில் இருப்பது பிரச்சினை இல்லை என்றும் இருப்பினும் மழைக்காலங்களில் இது சாத்தியமற்றது எனவும் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

எனவே இக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடியாக உரிய அதிகாரிகள் மாற்று வழிகளை அமைத்துக் கொடுக்குமாறும் பயணிகள் சார்பாக கேட்டுக் கேட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

மேலும் இது தொடர்பாக பலரும் தங்களது கேள்விகளை எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button