சீரற்ற காலநிலையினால் மூடப்பட்ட பாடசாலைகள்…
சீரற்ற காலநிலையின் காரணமாக இலங்கையின் வட பகுதிகளில் அனேக பாடசாலைகள் கால வரையறை இன்றி இன்று முதல் மூடப்பட்டுள்ளது.
அவ் வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒன்பது பாடசாலைகளும் மற்றும் மன்னார் மாவட்டத்தில் உள்ள இரண்டு முக்கிய பாடசாலைகளும் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற சுமார் 9 பாடசாலைகளும் அதனை அடுத்து வவுனியா மாவட்டத்திலும் சுமார் 9 பாடசாலைகள் இவ் சீரற்ற கால நிலையின் காரணமாக காலவரையறை இன்றி மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
நாட்டில் நிலவுகின்ற தொடர் மழையின் காரணமாக மேற்கூறப்பட்ட மாவட்டங்களில் வசிக்கும் குடும்பங்கள் பல வெள்ளத்தினால் பாதிப்படைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது .
மேலும் பல அரச பாடசாலை கட்டங்கள் இடைத்தங்கல் முகாம்கள் ஆக அமைக்கப்பட்டு வருவதாகவும் குறித்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதனை தொடர்ந்து இலங்கையின் வட பகுதியில் இயங்கி வருகின்ற பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலையினை மாணவர்கள் எதிர்நோக்குவதாகவும் மற்றும் இவர்களுக்குரிய முறையான போக்குவரத்து வசதிகளையும் காணபடாததினால் குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படுகின்ற ராணுவ அதிகாரிகள் இவர்களுக்குரிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
இவ்வாறு முல்லை தீவு மாவட்டத்தில் மட்டும் சீரற்ற மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் சுமார் 1586 குடும்பங்களை சேர்ந்த 4806 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் இவர்களில் 1039 பேர் இடைத்தங்கல் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 8 பாடசாலைகள் தேர்வு செய்யப்பட்டு இடைத்தங்கல் முகாம்களாக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனாலே பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.