தீவிரவாத தாக்குதல் என சித்தரிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நீதிமன்றம் விடுத்துள்ள விசேட உத்தரவு!!
2018 ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் என சித்தரிக்கப்பட்டு ஆங்காங்கே கத்தோலிக்க கோவில்களில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தற்போது சர்ச்சைக்குரிய தகவல்களை 5 வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில் சேனல்4 ஆனது வெளியிட்டு இருந்தது .
இந் நிலையில் தற்போது நீதிமன்றம் விசேட உத்தரவு ஒன்றினை விடுத்துள்ளது.
அதில் குறித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனித உரிமை தொடர்பான மனுக்களும் மற்றும் ஏனைய மனுக்களையும் பரிசீலிப்பதற்கு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி உயர்நீதிமன்றத்தினால் பரிசீலிக்கின்ற திகதியாக நிர்ணயித்து உள்ளது.
மேலும் இத் திகதியினைஇன்று நீதிமன்றம் திகதியினை நிர்ணயித்து வெளியிட்டு உள்ளது .
சேனல்4 அறிக்கையின் படி உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது அரசியலுக்காகவே செய்யப்பட்ட ஒன்றாக ஆவணப்படுத்தப்பட்ட செய்திகளை வெளியிட்டிருந்தது.
இருப்பினும் இது குறித்து முரணான கருத்துக்களை குறித்த ஆவணப்படுத்தலில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் உடனடியாக நீதிமன்றமானது இது குறித்த பரிசீலனைக் என திகதியினை அறிவித்துள்ளது .
அது மற்றும் இன்றி ஆறு பேர் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு ஒன்றும் நடைபெற்றது .
மேலும் இது தொடர்பாக ஏற்கனவே அவர்களினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
மேலும் இது தொடர்பான மனுக்களை கத்தோலிக்க பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களும் மற்றும் முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சபை என பல பிரமுகர்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது .
தற்போது மீண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இலங்கையில் தீவிரமடைந்துள்ளது.