விசாயின்றி தவித்த 31 இலங்கை பிரஜைகள் நடந்தது என்ன ??
இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு சென்று பணி புரிவது வழக்கமான ஒரு நடைமுறையாக இருக்கின்றது. அவ் வகையில் குவைத்தில் நீண்ட காலமாக வேலைக்காக சென்று விசா முடிந்த பின்னரும் விசாயின்றி அங்கு மறைந்திருந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த சுமார் 31 இலங்கையர்கள் நிர்கதியாகி இருந்த நிலையில் தற்போது 31 பேரும் பாதுகாப்பாக இலங்கை நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்களின் முறைப்பாடுகள் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் செலுத்தப்பட்டு பின்னர் இலங்கை தூதரகத்தினால் வழங்கப்பட்ட தாற்காலிக விமான அனுமதி பத்திரத்தினை வைத்தே இவர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்தி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அனுப்பப்பட்ட 31 இலங்கையர்களும் இன்று அதிகாலை சுமார் 6. 16 மணியளவில் ஸ்ரீலங்காவிற்கு சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இன் யூ எல் 23 எனப்படும் விமானம் மூலம் இலங்கையின் சர்வதேச விமான நிலையம் ஆன காட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்தனர்.
மேலும் இவர்களில் 28 பெண்களும் மூன்று ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
இவர்கள் அனைவரும் வீட்டு பணிக்காக சென்றவர்கள் எனவும் தூதரகம் தற்போது தகவலை வெளியிட்டு உள்ளது .
இது போன்ற சம்பவங்கள் தற்போது அதிகம் நடந்தேறி வருகின்றது.
அவ் வகையில் இந்த மாதம் 12ஆம் தேதி அளவில் விவசாயின்றி சற்று விரோதமாக குவைத்தில் தங்கி இருந்து ,
பணிபுரிந்த சுமார் 33 இலங்கை நாட்டைச் சேர்ந்த வீட்டு பணிப்பெண் வேலைக்காக சென்றிருந்தவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலும் இவ்வாறு சட்ட விரோதமாக விசாயின்றி மற்றும் பலவிதப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்த குவைத்திற்கு வீட்டு பணிப்பெண்களாகவும் ,
மற்றும் வேலைக்காகவும் சென்றிருந்த சுமார் 2000 பேர் இலங்கைக்கு மீண்டும் வருவதற்குரிய தங்களது பதிவினை குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்துள்ளதாக இலங்கை தூதரகம் தகவல்களை வெளியிட்டுள்ளது.
மேலும் இலங்கை தூதரகத்தின் பேச்சாளர் அவர்கள் குறிப்பிடுகையில்;
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட 2000 இலங்கை பிரஜைகள் குழுக்கள் குழுக்களாக எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு திருப்பி அனுப்ப இருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.
எனினும் சட்ட விரோதமாக விசா முடிவடைந்த பின்னரும் மறைந்திருந்து உயிரினை பணயம் வைத்து இவ்வாறு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு குவைத் நாட்டிற்கு வீட்டு பணி பெண்ணாக செல்லும் பெண்களோ அல்லது வேலைக்காக செல்லும் ஆண்களோ பெரும்பாலானோர்;
இலங்கையில் ஏற்படுகின்ற கஷ்டகாலங்களையும் பொருளாதார நெருக்கடிகளினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.
பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் தங்களது குடும்பங்களின் வளர்ச்சிக்காகவும் தங்களது குடும்பம் ஒரு வேளையாவது நன்கு உணவருந்தினால் போதும் ,
எனும் நோக்குடனே பலர் பல கனவுகளை சுமந்து கொண்டு இவ்வாறு குவைத், சவூதி போன்ற நாடுகளுக்கு வீட்டு பணிப் பெண்களாக செல்கின்றனர்.
இருப்பினும் இவ்வாறு செல்லும் நபர்களுக்கு பல்வேறுப்பட்ட அநீதிகள் இழைக்கப்படுவது தற்போது வரை தொடரப்பட்டு தான் வருகின்றது.
அந்த வகையில் இவர்களுடைய பாதுகாப்பினை அந்தந்த நாட்டிலுள்ள இலங்கை தூதரகமே வழங்க வேண்டும்.
எவராயினும் சட்ட விரோதமாக விசாயின்றி வெளிநாடுகளில் சிக்கிக் கொள்வதை தவிர்ப்போம் .