Srilanka News

மிக்ஜாம் புயலால் சென்னை விமான நிலையத்தின் நிலை… உருப்பெற்ற புயலின் உச்சகட்டம்… இயல்பு வாழ்க்கையை இழந்த மக்கள்!!!!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக ஏற்பட்ட மிக்ஜாம் எனப்படும் புயலால் தற்போது இந்தியாவில் பல்வேறுபட்ட சேதங்கள் ஏற்பட்டு வருகின்றது.

இந் நிலையில் குறித்த புயலானது ஆந்திரா நோக்கி நகர்வதினால் தமிழகத்தின் வடக்கு கடற்கரையை நோக்கி நெருங்கி வருவதன் காரணமாக சென்னையில் கன மழை பெய்வதோடு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் வாழ்கின்ற பல்வேறு மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைகளை இழந்து பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர்.

இந் நிலையில் சென்னை விமான நிலையமும் குறித்த புயலினால் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந் நிலையில் சுமார் 12 உள்நாட்டு மற்றும் வெளியூர் விமானங்களும், மற்றும் நான்கு சர்வதேச விமானங்களும் இதுவரையில் ரத்து செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது .

மற்றும் தற்காலிகமாக சென்னை விமான நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையினால் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தடைய இருந்த மூன்று சர்வதேச விமானங்களும் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

மற்றும் விமான ஓடுபாதையில் மழை நீர் புகுந்ததால் விமானங்கள் தரை இறங்கியதாகவும் தெரியவந்துள்ளது.

மற்றும் இவ்வாறு சீரற்ற காலநிலை காரணமாக இன்று இரவு 11 மணி வரை விமான ஓடுபாதைகளை மூடுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் . ​

மிக்ஜாம் புயலானது ஆந்திர பிரதேசத்தை நோக்கி நகர உள்ளதனால் ஆந்திர அரசு சுமார் 8 மாவட்டங்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கையினை கொடுத்துள்ளது.

தற்போது மிக்ஜாம் புயலானது மணிக்கு எட்டு கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து சென்னையிலிருந்து 90 கி . மீ லும் நெல்லூரிலிருந்து 140 கி.மீ யிலும் நகர்கிறது.

மற்றும் குறித்த புயலானது நெல்லூருக்கும் மச்சிலிப்பட்டினத்திற்கும் இடையே கடக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது .

மற்றும் ஆந்திர பகுதிகளில் வாழ்கின்ற மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என ஆந்திர மாநில அரசு மக்களுக்கு அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button