யாழில் மீட்கப்பட்டுள்ள கேரளா கஞ்சா அதிரடியாகும் விசாரணைகள்…..
யாழில் மீட்கப்பட்டுள்ள கேரளா கஞ்சா ஆனது வல்வெட்டித்துறை என்னும் இடத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
இவ்வாறு யாழில் மீட்கப்பட்டுள்ள கேரளா கஞ்சா நேற்றைய தினம் (29 10 2023) இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 50 கிலோ எடைக்கும் அதிகமாக கஞ்சா போதை பொருள் காணப்படுவதாக போலீஸ் தரப்பினர் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் வல்வெட்டி துறையிலே காணப்படுகின்ற ஊரைக்காடு எனப்படுகின்ற கடலோரப் பகுதியில் மர்ம பொதியொன்று இருப்பதாக ராணுவ புலனாய்வு பிரிவிற்கு வழங்கப்பட்ட தகவலினை அடுத்து குறித்த பகுதியில் ராணுவத்தினரால் நடத்தப்பட்ட சோதனையின் போது குறித்து மர்ம பொருள் கேரளா கஞ்சா என அடையாளப்படுத்தப்பட்டு மீட்கப்பட்டுள்ளது .
மற்றும் ஆளில்லாமல் காணப்பட்ட காரணத்தினால் குறித்த போதை பொருள் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் மீட்கப்பட்டுள்ள குறித்த போதை பொருளானது போலீஸ் நிலையத்தில் தற்போது வைக்கப்பட்டு, மற்றும் குறித்த பொருளானது எவ்வாறு வல்வெட்டி துறை கடலோர பகுதிக்கு எவ்வாறு வந்திருக்கின்றது என்ற கோணத்திலும் மற்றும் யார் யார் இது தொடர்பில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பவற்றை அறிவதற்கென பல்வேறு கோணங்களிலும் போலீசாரினாள் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை நாட்டில் அதிகரித்து வருகின்ற போதைப்பொருள் பாவனையின் காரணமாக பல்வேறு பட்ட தரப்பினரும் பாதிப்படைந்து வருகின்றனர்.
இச் சமயத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இவ்வாறு போதை பொருட்கள் அவ்வப்போது மீட்கப்பட்டு வருகின்றமையும் மற்றும் இது தொடர்பான நாசகர வேலைகள் அதிகரித்து வருகின்றமையும் உண்மையில் நம் நாட்டிற்கு நல்லதான விடயம் அன்று.
எனவே இது குறித்து நாட்டின் பிரஜைகள் சற்று விழிப்பாக இருக்க வேண்டும்.