மொரோக்கோ நிலநடுக்கத்தினால் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள் தொடர்ந்து சடலங்களை தேடிவரும் மீட்பு குழு…
கடந்த வெள்ளிக்கிழமை அன்று வேஸ்டன் நோர்த் ஆப்ரிக்கா மொரோக்கோ இல் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 3000 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் .
மேலும் சுமார் 2501 ற்கும் அதிகமான பேர் குறித்த நில நடுக்கம் காரணமாக காயம் அடைந்து உள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் தங்கள் உள்ளூர் ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிட்டுள்ளது .
ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது சுமார் ஆறு தசம் எட்டு(6.8 ரிக்டர் ) ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் நிலநடுக்கமானது ஏற்பட்டு மூன்று நாட்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ;
உறவினர்கள் மற்றும் அயல்வீட்டவர்களினால் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் பல்வேறு பட்ட நபர்களை தேடி வருகின்றனர் மீட்பு குழுவினர்.
சுமார் அதிகாலை 1.30 மணி அளவில் ஏற்பட்ட இந் நிலநடுக்கம் ஆனது பாரிய பாதிப்பினை அப் பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் எங்கும் மலையினால் சூழப்பட்ட ஒரு பகுதியே மொராக்கோ ஆகும் .
ஏற்பட்ட இவ் நிலநடுக்கமானது மக்கள் மத்தியில் அதிக பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மொராக்கோ நிலநடுக்கம் ….
மேலும் மொராக்கோ அரசாங்கம் ஆனது இக் கடினமான சூழ்நிலையில் இருந்து மொராக்கோ தங்கள் மக்களை மீட்டு எடுப்பதற்கான பிரிட்டன், ஸ்பெயிண், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் உதவியும் கோரி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது .
மொரோக்கோ மலைப் பிரதேசமாக இருப்பதனால் மீட்பு பணியாளர்கள் கடும் சிரமத்தின் மத்தியில் மக்களை காப்பாற்ற வேண்டும் எனும் நோக்குடன் விரைவாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் மலைப்பிரதேசம் என்கின்றதனால் கனரக தூக்கும் கருவிகள் மற்றும் அதி நவீன கருவிகளை மலைப் பகுதியில் கொண்டு செல்வதில் ஏற்பட்டுள்ள சிரமம் காரணமாக;
மீட்பு பணியாளர்கள் தங்களது கைகளினால் நிலநடுக்கத்தின் உயிர் பிழைத்தும் இவ் கொடிய நிலநடுக்கத்தினால் மாட்டிக் கொண்டுள்ள மக்களை காப்பாற்றுவதற்கு போராடி வருகின்றனர்.
மேலும் மொரோக்கோவில் ஏற்பட்டுள்ள இந் நிலநடுக்கமானது இப் பகுதியில் முன்பு ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களிலும் பார்க்க மிக சக்தி வாய்ந்த மற்றும் பெரிய மிகப்பெரிய நிலநடுக்கம் என அந் நாட்டு அரசாங்கங்கள் உறுதிப்படுத்தி உள்ளது.
மலைப் பிரதேசம் என்பதனால் இவ் பேரழிவு இனால் மாட்டிக் கொண்டுள்ள மக்களினை காப்பாற்றுவதற்கு சிறந்த வழி வான்வெளி.
இதனால் தற்போது வான்வழி மூலமாக உதவிகளை செய்ய இருப்பதாக தற்போது மீட்பு படையினர் தெரிவித்து உள்ளனர் .
உடனடியாக ஸ்பெயின் ராணுவத்தின் அவசரக்கால மீட்பு பணிக்குழு ஒன்று மொரோக்காவினை சென்றடைந்துள்ளது.
மேலும் இது குறித்த மீட்பு பணி குழுவின் தலைவர் கூறுகையில் மூன்று நாட்களில் பின்னரான இக் கோர நிலநடுக்கத்தில் உயிருடன் இருப்பவர்களை கண்டறிவது என்பது சுலபமான செயல் இல்லை எனவும்,
இருப்பினும் நம்பிக்கை கொண்டு அவர்களை தேடி மீட்கும் முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக பழமை வாய்ந்த மற்றும் அதித சிறப்பு மிக்க மசூதியொன்று மேலும் கலாச்சார அமைச்சகத்தின் முக்கிய ஆதாரம் எனவும் இதனை குறிப்பிடுவது தெரிய வருகின்றது.
மற்றும் இக் கலாச்சார அமைச்சகம் ஆனது இதனை சரி செய்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க உள்ளதாகவும் .
மேலும் அதற்குரிய செலவுகளை உடனடியாக தயார் செய்வதாகவும் தெரிய வருகின்றது இருப்பினும் இது குறித்த மேலதிக தகவல்களை அமைச்சகம் வழங்கவில்லை.