330 மில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கைக்கு வழங்க இருக்கும் IMF … வெளியான தகவல்…
இலங்கையில் தற்போது கிடைக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு உரிய உடன்பாட்டிற்குரிய அனுமதியினை IMF விரைவில் வழங்க இருக்கின்றதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கைக்கான சுமார் 330 மில்லியன் அமெரிக்க டாலர் தொடர்பான நிதி வசதியின் முதலாவது மீளாய்வு தொடர்பாக மேலாய்விற்கு உடன்பாட்டு சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கையும் தற்போது எட்டி உள்ளது .
மேலும் இந்த உடன்பாட்டின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியிடம் இருந்து இலங்கைக்கு சுமார் 330 மில்லியன் டொலரை இரண்டு தவணைகளின் அடிப்படையில் இலங்கை பெற்றுக் கொள்ள உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மற்றும் குறித்த உடன்படிக்கை தொடர்பாக நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை விரைவில் விரைவில் அனுமதி வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் குறித்த அனுமதி கடன் மறுசீலமைப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் சார்ந்துள்ளது எனவும் தெரியவந்துள்ளது.
மற்றும் இதே வேளை கடந்த ஜூன் மாத இறுதி பகுதி வரை இத் திட்டத்திற்குரிய செயற்றுடன் திருத்திகரமாக இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
மற்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற நிபந்தனைகளில் வரி வருவாய் தவிர மற்ற அனைத்து இலக்குகளும் தற்போது இலங்கையில் எட்டப்பட்டன என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுவர் தற்போது குறிப்பிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.